மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பெண்கள் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து விரைவில் அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 10ல் ஜாதவ்பூர் பல்கலையில் ராகிங் காரணமாக மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், கொல்கத்தாவின் தெற்கு புறநகரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த சம்பவங்களையடுத்து கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.