வீடியோ
*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே!..
*மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களே!...
*எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டத்தில் தமிழ் உயிர் எழுத்துகள் படும்பாட்டினை காண வாருங்களேன்!.. மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை அழைத்து வந்து நமது ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க அனுமதித்துள்ளார்களே!.. நெஞ்சு பொறுக்குதில்லையே!.. இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்!.. என்ற வரிகள் அல்லவா எங்கள் கண் முன்னால் வந்து நிற்கிறது. முடிவு கட்டுங்கள்!.. இந்தி திணிப்பினை எதிர்த்து மொழிப்போர் தியாகிகள் வீர வரலாறு படைத்தது போல்... மாணவர்களின் கல்வி நலனை பாதுக்காப்பதற்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி தீவிர போராட்டங்களை நடத்துவதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறோம். கல்வி சிறந்த தமிழ்நாடு!.. என்ற பாரதியின் வரிகளுக்கு பெருமையினை சேர்க்கும் வகையில் ஒவ்வொரு நிமிடமும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல் திட்டங்களை வகுத்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
*ஆனால் SCERT இயக்குனர் புதிய கல்விக் கொள்கையினை மிக வேகமாக அமுல்படுத்தி வருகிறார்.
*ஆனால் ஒவ்வொரு நாளும் SCERT இயக்குனர் கல்வியின் பெருமையினை கேள்விக்குறியாக்கி வருகிறார்... ஒரே நாடு ஒரே தேர்தல் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே தேர்வு முறை..
*1-5 வகுப்பு மாணவர்களுக்கு வாரம் தோறும் ஆன்லைன் தேர்வு ...
*புதிய கல்விக் கொள்கையினை மீறிய குழந்தைகளை வதை செய்யும் கல்விக் கொள்கை அல்லவா?...
*முடிவு கட்ட வேண்டுகிறோம்!.. முடிவு கட்ட வேண்டுகிறோம்!..
*அரசின் மீது அக்கறை கொண்டுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் குரலல்லவா?..
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.