நாளை காலை அதாவது 
மதியம்11.40மணிக்குத்தான் 
வாக்கிய கணிதப்படி
 சதுர்த்தி திதி வருகிறது!
அதன் பின்னர் ஆரம்பித்து செய்தால்
அதுதான் விநாயகர் சதுர்த்தி பூஜைஆகும்!
நம்ப சௌகரியம் கருதி காலை எட்டு மணிக்கு பத்துமணிக்கு எல்லாம் பூஜை செய்து விட்டு விரதம் முடித்து விட்டு பிரசாதங்கள
கொடுத்து விடலாம்
சாப்பிடலாம் என்று சொல்லி திட்டம் போட்டால் இதெல்லாம் விநாயக சதுர்த்தி பூஜை கணக்கில் சேராது!
நாளை 18/09/2023 திங்கட்கிழமை 
அற்புதமான நாள்.
பிள்ளபோட்டு செயல் எதையும் தொடங்கு!
          எதையும்  எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும்ஆதியும் அந்தமும் அவரே, தும்பிக்கையை நினைக்கவைக்கும்
 கோடும்
 இணைந்து "உ" எனும் 
பிள்ளையார் சுழி உருவானது.
 பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.
பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்பலகோடி!
 இலைகள்/ பலன்கள்:-
                      விநாயகர் சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது என்பார்கள். அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதால் அடையக்கூடிய பலன்களைப் பார்ப்போமா?
(1)முல்லை இலை கொண்டு வழிபட்டால், அறம் வளர்க்கும்.
(2)கரிசலாங்கண்ணி இலையால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்துக்குத் தேவையான பொருட்சேர்க்கை நிகழும்!
(3)வில்வம் இலையால் அர்ச்சித்து விநாயகரை வழிபட்டால், விரும்பிய அனைத்தும் கிடைக்கும்.
(4)அருகம்புல்லால் அர்ச்சித்து வணங்கினால் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம்!
(5)இலந்தை இலையால் அர்ச்சனை செய்து ஆனைமுகத்தானை வழிபட்டால், கல்வியில் மேன்மை பெறலாம்.
(6)ஊமத்தை இலையைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், பெருந்தன்மையான மனம் பெறலாம்!
(7)வன்னி இலை கொண்டு வழிபட்டால், பூவுலகிலும் சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.
(8)நாயுருவி இலையால் வழிபட்டால், முகப் பொலிவும் அழகும் கூடும். தேஜஸூடன் வாழலாம்!
(9)கண்டங்கத்திரி இலையால் கணபதியை வழிபட்டால், வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறலாம்.
(10)அரளி இலையால் ஆனைமுகனை வழிபட்டால், எல்லா முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
(11)எருக்கம் இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால், கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குழந்தை ஞானத்துடனும் யோகத்துடனும் வளரும்.
(12)மருதம் இலையால் வழிபட்டால், மகப்பேறு கிடைக்கும்.
(13)விஷ்ணுகிராந்தி இலையால் விநாயகப் பெருமானை வழிபட்டால், தேர்ந்த அறிவுடன் திகழலாம். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
(14)மாதுளை இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால், பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
(15)தேவதாரு இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால், எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.
(16)மருக்கொழுந்து இலையால் மகேசன் மைந்தனை வழிபட்டால், இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.
(17)அரச இலை கொண்டு வழிபட்டால், உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
(18)ஜாதிமல்லி இலை கொண்டு விக்னேஸ்வரனை வழிபட்டால், சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறலாம்!
(19)தாழம் இலையால் ஆனைமுகனை வழிபட்டால், செல்வச் செழிப்புடன் வாழலாம்! .
(20)அகத்தி இலையால் அர்ச்சித்து பார்வதிமைந்தனை வேண்டிக் கொண்டால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்! பொருட்சேர்க்கை நிகழும்!
(21)தவனம் ஜகர்ப்பூரஸ இலை கொண்டு வழிபட்டால், நல்ல கணவன்- அல்லது மனைவி அமையப் பெறும். தாம்பத்தியம் சிறக்கும். நல்ல வாழ்க்கைத் துணையுடன் இனிதே வாழலாம்.
21 பத்திரங்கள் / இலைகள் 
------------------------------------------------
01. அருகம்புல் 
02. முல்லை 
03. கரிசலாங்கண்ணி 
04. வில்வம் 
05. இலந்தை 
06. வன்னி 
07. ஊமத்தை 
08. கண்டங்கத்திரி 
09. செவ்வரளி 
10. எருக்க
11. மருத
12. மாதுளை 
13. விஷ்ணுகிராந்தி 
14. அகத்திக்கீரை 
15. தவனம் 
16. தேவதாரு 
17. மரிக்கொழுந்து 
18. ஜாதிமல்லி 
19. நாயுருவி 
20. அரச 
21. தாழை 
21 புஷ்பங்கள் 
-------------------------
01. புண்ணை  
02. மந்தாரை 
03. மகிழம்பூ 
04. பாதிரி 
05. தும்பை  
06. முல்லை 
07. ஊமத்தை 
08. கண்டங்கத்திரி 
09. செவ்வரளி 
10. எருக்க
11. செங்கழநீர் 
12. மாதுளை 
13. வில்வம் பூ 
14. குருந்தை  
15. சம்மங்கி  
16. பவழமல்லி  
17. செண்பகம்  
18. ஜாதிமல்லி 
19. மாம்பூ 
20. கொன்றை 
21. தாழை 
விநாயகர் அர்ச்சனைக்கு உகந்த இலைகள்
-----------------------------------------------------------------------------
              விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை இந்த மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய மிக பெரிய பலன்கள் கிடைக்கும்.
முல்லை, 
ஜாதி மல்லிகை, 
அரளி, 
எருக்கம்பூ, 
அகத்தி பூ 
மற்ற புஷ்பங்கள் 
எருக்கு இலை, 
கரிசலாங்கண்ணி, 
மருத இலை, 
வில்வம், 
விஷ்ணு கிரந்தி, 
ஊமத்தை, 
மாதுளை, 
இலந்தை, 
தேவதாரு, 
வெள்ளை அருகம்புல், 
மருவு, 
வன்னி, 
அரசு, 
நாயுருவி, 
கண்டங்கத்தரி, 
அகத்தி 
விநாயகரின்125வடிவங்களில் சில!
                        விநாயகர் பலவிதமான
 அவதாரங்கள் எடுத்ததாகத் தெரிவிக்கிறது ஸ்ரீவிநாயக புராணம்.
(01) வக்ரதுண்ட விநாயகர்:
                        இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போதும் தோன்றி, மீண்டும் உலகைப் படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.
(02) கஜானன விநாயகர்:
                        சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.
(03) விக்கிரனபராஜர்:
                      காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக பிறந்தவர்.
(04) மயூரேசர்:
                      பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.
(05) உபமயூரேசர்:
                      சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.
(06) பாலச்சந்திரர்:
                      தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.
(07) சிந்தாமணி:
                    கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புதப் பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.
(08) கணேசர்:
                    பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, ஐந்து முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.
(09) கணபதி:
                    கஜமுகாசுரனை வென்றவர்.
(10) மகோற்கடர்:
                     காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.
(11) துண்டி:
                   துராசதன் என்ற அசுரனை வென்றவர்.
(12) வல்லப விநாயகர்:
                    மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர். வல்லப விநாயகரை மனதார வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பூஜைக்கு படைக்கும் பழங்கள்!
வாழைப்பழங்கள்.  மா பலா நாவல் பழம், 
விளாம்பழம், பிரப்பம்பழம்,
 கரும்பு, கொய்யா பழம், பேரிக்காய், வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் ஆரஞ்சு அன்னாசி இதர பழங்கள். 
தாம்பூலம், கற்பூரம், சாம்பிராணி வகையறாக்கள். 
பிள்ளையார் சதுர்த்திக்கு 21 நைவேத்தியங்கள் 
------------------------------------------------------------------------------------
நெய் மிளகுப் பொங்கல், 
சர்க்கரைப் பொங்கல், 
கற்கண்டு பொங்கல், 
பால்பொங்கல், 
பால்சாதம், 
அக்கார வடிசில், 
சம்பா சாதம், 
தயிர்சாதம், 
புளிசாதம், 
எலுமிச்சை சாதம், 
தேங்காய் சாதம், 
தானியப்பொடி சாதம், 
மருந்துக்குழம்பு சாதம், 
சாம்பார் சாதம், 
நாரத்தங்காய் சாதம், 
மாங்காய்சாதம், 
துவையல் சாதம், 
அரிசி உப்புமா, 
ரவா உப்புமா, 
மாவுக்கனி 
மற்றும், கொழக்கட்டை வகையறாக்கள், வடை, அப்பம், சுண்டல். 
ஆகிய 21 வகை நைவேத்தியங்களை விநாயகருக்குப் படைத்து வழிபடலாம்.
கணபதிகதைகள்
பிரணவமே வேதத்தின் மூலம். ஓம் என்ற ஒலியின் வடிவமே விநாயகர்.
 எனவே பிரணவப் பொருள் என்று விநாயகரை அழைக்கிறோம். 
ஈஸ்வரனின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார்.
 அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு.
 தேவர்களுக்கு துன்பம் கொடுத்த
 கஜமுகன் என்ற அரக்கனை  அழிப்பதற்காக சிவபெருமான் அருளால் விநாயகப் பெருமான் அவதரித்தார்.
விநாயகர் கஜமுகனுடன் போர் புரிந்தார். 
அவன் ஆயுதங்களால் அழியாத  வரம் பெற்றவன். விநாயகர் தனது வலக் கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ, அது கஜமுகனை சாய்த்தது.
 அவன் பெருச்சாளி வடிவில்  எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான்.
விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள்புரிந்தார். இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை 
எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.
 
 
 
 
 
 
 
 
