t> கல்விச்சுடர் சமையல் எரிவாயு இணைப்புடன் கைரேகை பதிவு கட்டாயம் தமிழ்நாட்டில் கைரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 December 2023

சமையல் எரிவாயு இணைப்புடன் கைரேகை பதிவு கட்டாயம் தமிழ்நாட்டில் கைரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரம்



 சமையல் எரிவாயு இணைப்புடன் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால் தமிழகத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர்களை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இதுபோல பிற இணைப்புகளுக்கு மானியமும் அளிக்கப்படுகிறது.

இதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க கேஸ் இணைப்புடன் ஆதார் எண் மற்றும் கைரேகையை பதிவு செய்வதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி ஓசூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கேஸ் ஏஜென்சிகளில் திரண்ட மக்கள் வரிசையில் நின்று ஆதார் எண், கைரேகையை பதிவு செய்தனர்.ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் நிலையில் ஒருவரே பல்வேறு கேஸ் நிறுவனங்களில் இணைப்புகளை வைத்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளனர்.

இதை தடுக்கும் நோக்கில் இந்த பதிவுகள் செய்யப்படுவதாக கேஸ் ஏஜென்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்கும் போது ஒருவருக்கு எத்தனை கேஸ் இணைப்புகள் உள்ளன என்பது குறித்து தெரியவரும்.

அவ்வாறு தெரியவரும் இணைப்புகளுக்கு மானியம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

JOIN KALVICHUDAR CHANNEL