இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஆம் தேதி திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 06.30 முதல் 07.30 வரை பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கலாம் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 18 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த விழா எதற்காக கொண்டாடப்படுகிறது என்று பார்ப்போம்.பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளானது ஒரு அறுவடை பண்டிகை நாள் ஆகும். அது செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் நாட்டில் விவசாயம் செழிக்க உதவிய இயற்கைக்கு நன்றி செழுத்தும் விதமாகவே தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
பொங்கல் தினங்களில் வீட்டின் வெளியில் கோலம் இடுகின்றனர். அந்த ஆண்டில் வயலில் அறுவடை செய்த புதிய அரிசியில் வெல்லம் நெய் சேர்த்து பொங்கல் தயாரித்து சூரியபகவானுக்கு படைக்கின்றனர்.
இப்படி கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் இந்த பண்டிகையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடி, சிறப்பாக தயாரிக்கப்பட்ட பொங்கல் பிரசாதத்தை உண்டு மகிழ்கின்றனர்.
தமிகத்தில் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 2024ல் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி தொடங்கி ஜனவரி 18ம் தேதி முடிவடையும். ஜனவரி 14 போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15, தை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 16, மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.