தமிழக அரசு ஊழியர்களுக்கு நான்கு விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் முன் தேதியுடன் கூடிய உயர்வு.
அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது 46%ஆக உள்ள அகவிலைப்படி 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதனால், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்பட 16 லட்சம் பேர் பயனடைவார்கள். இதனிடையே அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் அரசுக்கு ஆண்டுதோறும் ₹2,588 கோடி கூடுதல் செலவு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.