. -->

Now Online

FLASH NEWS


Monday 1 April 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.04.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.04.2024



திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:387


இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

விளக்கம்:

இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.

பழமொழி :
A single tree makes no forest

தனி மரம் தோப்பாகாது


இரண்டொழுக்க பண்புகள் :

 1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்.
பொன்மொழி :

ஆயிரம் வீண் வார்த்தைகளை விட பயனுள்ள இதமான ஒரு நல்ல வார்த்தை சிறந்தது
- புத்தர்.

பொது அறிவு : 

1. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் எது?


விடை: திருச்சி, தஞ்சாவூர் 

2. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?

விடை: 5
English words & meanings :

 Cosmology(n) - the science of the universe விண்வெளி இயல்
Cosset (v) - to pamper somebody செல்லம் கொடுத்தல்
ஆரோக்ய வாழ்வு : 

பருப்புகீரை :பருப்புக் கீரையில் உள ஆக்சாலிக் அமிலம் சிலருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரனமாகலாம். எனவே சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பருப்புக் கீரையைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

ஏப்ரல் 01

வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்தநாள்



வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார். ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.
நீதிக்கதை

 வீண் பெருமை துன்பம் தரும்.



ஒரு காட்டின் அருகில் கழுதை மேய்ந்து கொண்டிருந்தது. அருகில் இருந்த குடிசையில் பெரிய சேவல் ஒன்று இருந்தது. அதுவும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. திடீரென்று அங்கு ஒரு சிங்கம் வந்தது. சிங்கத்தைக் கண்ட சேவலும் கழுதையும் மிரண்டு பலமாகக் கூவின.

சிங்கத்திற்கு கழுதையின் குரல் புதிதல்ல. ஆனால் அச்சிங்கம் சேவலின் கூவல் கேட்டதில்லை. அதனால் அது பயந்து அங்கிருந்து திரும்பி ஓட ஆரம்பித்தது.

சிங்கம் ஓடுவதைக் கண்ட கழுதை தன் குரலைக் கேட்டுத்தான் சிங்கம் ஓடுவதாக நினைத்தது. தன்னைப் பற்றி பெருமையாக எண்ணிக் கொண்டது. தனக்கு அதிக பலம் இருப்பதாக நினைத்தது. உடனே சிங்கத்தைத் துரத்திக் கொண்டு ஓடிற்று.

சிறிது தூரம் சென்றதும் சிங்கம் திரும்பிப் பார்த்தது. கழுதை தூரத்தில் ஓடி வருவதைக் கண்டது. அருகில் சேவலைக் காணவில்லை. அதனால் அதன் பயம் நீங்கிற்று. திரும்ப ஓடி வந்து கழுதையின் மேல் பாய்ந்து அதை கொன்று தின்றது.



வீணாக பெருமை கொண்ட கழுதை க்கு துன்பம் நேரிட்டது.

இன்றைய செய்திகள்

01.04.2024

*தென் சென்னை, வடசென்னை தொகுதி ஓட்டுப்பதிவுக்கு மூன்று மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்- தலைமை தேர்தல் அதிகாரி.

 *பரனூர், ஆத்தூர் உள்ளிட்ட மொத்த ஏழு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ரூ. 20 வரை சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.
 
*தமிழகத்துக்கு ஆறாவது முறையாக வருகிறார் பிரதமர் மோடி; ஒன்பதாம் தேதி சென்னையில் 'ரோடு ஷோ'.

*ஒகேனக்கலில் நீர் வரத்து 400 கன அடியாக சரிவு.

 *மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது போபண்ணா ஜோடி.

Today's Headlines

*Three electronic machines will be used for polling in South Chennai and North Chennai constituencies- Chief Returning Officer.

  *From today onwards, Rs. Increase in customs duty till 20
 
 *Prime Minister Modi is coming to Tamil Nadu for the sixth time; 'Road Show' in Chennai on the 9th.

 *Water flow in Okanagan declined to 400 cubic feet.

  *Miami Open Tennis: Bopanna pair won the title.
 Prepared by

Covai women ICT_போதிமரம்