பொறியியல் தேர்வுகள் ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை., மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியானதும், ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.