t> கல்விச்சுடர் “பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது” – அமைச்சர் தங்கம் தென்னரசு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 June 2024

“பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது” – அமைச்சர் தங்கம் தென்னரசு


அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதிலளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.


அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்ததையடுத்து கடந்த 20ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் மீண்டும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம், ஏனைய ஓய்வுகால நன்மைகள் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றன. அப்போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், சாத்தியக்கூறுகளை ஆராய அமைத்த குழு பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

JOIN KALVICHUDAR CHANNEL