. -->

Now Online

FLASH NEWS


Thursday 4 July 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2024


  

திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: கல்லாமை

குறள் எண்:410

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

பொருள் :அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர்,
மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

பழமொழி :
Fair words butter no parsnips.

சர்க்கரை என்றால் தித்திக்குமா?

இரண்டொழுக்க பண்புகள் :

* போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

* என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.
பொன்மொழி :

" தோல்விகளுக்கு இடையில் தான் வாய்ப்புகள் மறைந்திருக்கின்றன ; அதனால் தோல்விகளைக் கண்டு அஞ்சாதே"----ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

பொது அறிவு : 

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?


விடை: டால்பின்

2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?

விடை: ஸ்டான் பிஷ் 

English words & meanings :

 amiable-நட்பு, 

affable- நட்புணர்வுள்ள
வேளாண்மையும் வாழ்வும் : 

ஆனால் இயற்கை வேளாண்மை மண்ணையும் மனிதர்களையும் பாதுகாக்கும் சிறந்த வேளாண்மை முறையாகும்.

ஜூலை 04

மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். 

இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்

நீதிக்கதை

 ரகசியம் என்ன?

ஒரு நாட்டின் சிறந்த கோதுமையை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயி ஒருவரை பேட்டி எடுக்க பத்திரிக்கையாளர் ஒருவர் சென்றார்.

 விவசாயிடம் பத்திரிக்கையாளர் "எப்படி உங்களால் மட்டும் தரமான கோதுமையை உற்பத்தி செய்ய முடிகிறது"? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி, "என்னுடைய பக்கத்து வயலில் உள்ளவர்களுக்கும் என்னிடம் உள்ள தரமான,சிறந்த கோதுமை விதைகளை கொடுத்து பயிரிடச் சொன்னேன். அதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம்" என்று கூறினார்.

அதற்கு பேட்டி எடுப்பவர் ".அது எப்படி?,அவர்களுக்கும் தரமான விதைகளை கொடுத்தால் அவர்களும் உங்களுக்கு போட்டியாக வந்து விடுவார்கள் அல்லவா?, என்று கேட்டார்.

 அதற்குஅவர்,"காற்று வீசும் போது ஒரு செடியில் உள்ள மகரந்தம் ஒரு வயலில் இருந்து பக்கத்து வயலில் உள்ள செடி வரைக்கும் பரவும். அவர்கள் தரம் குறைந்த கோதுமைகளை பயிரிட்டால் அதிலிருந்து வரக்கூடிய மகரந்தம் என்னுடைய பயிரையும் பாதிக்கும். எனவே அவர்களுக்கும் தரமான விதைகளை கொடுத்து பயிரிட செய்வேன்", என்றார்.

"அதனால்,நான் தரமான கோதுமையை உற்பத்தி செய்ய வேண்டுமானால் என்னை சுற்றி இருப்பவர்களும் தரமான கோதுமையே உற்பத்தி செய்ய வேண்டும்", என்றார்.

அதுபோல் நாமும் சந்தோஷமான வாழ்க்கை வாழ,நம்மை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

04.07.2024

# குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம்: தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் பதிவு.

# தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மூலமாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

# சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் பாடத்திட்ட பள்ளிகள் கட்டாயக்கல்வி சட்ட இடஒதுக்கீடு வரையறைக்குள் வராது என்பதால் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கும்படி கோர முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

# மேகாலயாவில் தொடங்கியது இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி.

# அசாம் வெள்ளம்: 28 மாவட்டங்களில் 11.34 லட்சம் மக்கள் பாதிப்பு; 38 பேர் உயிரிழப்பு.

# அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை விட கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: சி.என்.என். கருத்துக்கணிப்பு.

# டி20 தரவரிசை: ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா.

# ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

# Cooking gas supply to homes through pipeline: 30 thousand registered across Tamil Nadu.

 # Chief Minister Stalin released 100 legal books translated from English into Tamil by the Tamil Nadu State Legal Official Language Commission.

 # The Tamil Nadu government has informed the High Court that CBSE and ICS curriculum schools do not fall under the compulsory education law reservation limits and cannot claim 25 per cent quota.

 # India-Mongolia joint military exercise begins in Meghalaya

 # Assam floods: 11.34 lakh people affected in 28 districts; 38 people lost their lives.

 # US presidential election.. Kamala Harris has a better chance of winning than Biden: CNN Survey.

 # T20 rankings: Indian player Hardik Pandya tops the all-rounders list.

 # European Football Championship: Netherlands advance to quarter-finals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்