யாரெல்லாம் தொழில் வரி கட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தொழில்வரி யார் கட்ட வேண்டும்?
மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் சம்பளப் பட்டுவாடா செய்யும் அலுவலர்கள், மத்திய, மாநில அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைகள், நிறுவனங்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் விளம்பர நிறுவனங்கள், நிறுவனங்கள், தொழில் புரிவோர், தமிழ்நாடு அரசுக்கு விற்பனை வரி செலுத்தும் நபர்கள், மற்றும் சொந்தமாக தொழில் புரிவோர் இந்தத் தொழில் வரி கட்ட வேண்டும்.
தொழில்புரிபவர் அல்லது பணியாளரின் அரையாண்டு வருமானம் / சம்பளம் 21,001 ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர் தொழில்வரி செலுத்த வேண்டும்.
ஆறு மாத சம்பளம் 20,000
ரூபாய் மற்றும் அதற்கு கீழ் வருமானம் இருப்பவர்கள் இந்தத் தொழில் வரி கட்டத் தேவையில்லை. மேலும், தற்காலிக பணியில் இருப்பவர்கள் இந்த வரி கட்டத் தேவையில்லை.
இந்தத் தொழில்வரி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.
உரிய காலத்திற்குள் தொழில்வரியினை செலுத்தத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதத் தொகையுடன் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.