அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை அறிவிப்பு
தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.