t> கல்விச்சுடர் 2025 ஜனவரி 1 முதல் பிறக்கப்போகும் பீட்டா தலைமுறை! ரெடியாக இருக்கும் சவால்கள்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 December 2024

2025 ஜனவரி 1 முதல் பிறக்கப்போகும் பீட்டா தலைமுறை! ரெடியாக இருக்கும் சவால்கள்!




ஜனவரி 1, 2025 முதல் உலக மக்கள்தொகையில் புதிதாக ஒரு குழு சேர உள்ளது. அவர்கள்தான் பீட்டா தலைமுறை. 2025 முதல் 2039 வரை பிறக்கும் குழந்தைகள் பீட்டா தலைமுறை என்று அழைக்கப்படுவார்கள். 

மேலும் 2035ஆம் ஆண்டில் இவர்கள் உலக மக்கள்தொகையில் 16 சதவீதம் பேராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பலர் 22ஆம் நூற்றாண்டின் பிறப்பையும் காண வாய்ப்புள்ளது என சமூக ஆராய்ச்சியாளர் மார்க் மெக்ரிண்டில் கூறுகிறார்.

இசட் தலைமுறை (1996-2010), மில்லினியல்கள் (1981-1996) என்ற வரிசையில் ஜெனரேஷன் ஆல்பாவுக்கு (2010-2024) பிறகு வரும் தலைமுறைதான் ஜெனரேஷன் பீட்டா. மனித வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்க கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி, தலைமுறைகளுக்குப் பெயரிடும் வழக்கம் ஜெனரேஷன் ஆல்பாவில் இருந்து ஆரம்பித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு: எஃப்.ஐ.ஆர் கசிவுக்கு என்ன காரணம்?

பீட்டா தலைமுறை (Generation Beta):

'பீட்டா குழந்தைகள்' (Beta babies) என்று அழைக்கப்படும் தலைமுறை, அன்றாட வாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் காண்பார்கள். தானியங்கி போக்குவரத்து, அணிந்துகொள்ளக்கூடிய சுகாதார தொழில்நுட்பங்கள், அதிவேகமான மெய்நிகர் சூழல்கள் ஆகியவற்றை அன்றாட வாழ்க்கையின் நிலையான அம்சங்களாக அனுபவிக்கும் முதல் தலைமுறையாக அவர்கள் இருப்பார்கள்.

"ஜெனரேஷன் ஆல்பா ஸ்மார்ட் டெக்னாலஜி மற்றும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சியை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். அன்றாட வாழ்க்கை, கல்வி, பணியிடங்கள், சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் AI மற்றும் தானியங்கித் முறை முழுமையாக ஒருங்கிணைந்த சகாப்தத்தில் பீட்டா தலைமுறையினர் வாழ்வார்கள்" என்று மார்க் மெக்ரிண்டில்கூறியுள்ளார்.

பீட்டா தலைமுறைக்கான சவால்கள்:

தொழில்நுட்பம் அவர்களின் விரல் நுனியில் இருக்கும் அதே வேளையில், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகைப் பெருக்கம் போன்ற பல குறிப்பிடத்தக்க சவால்களைக் கொண்ட சமூகத்தில் பீட்டா தலைமுறை வாழ வேண்டியிருக்கும். இந்த சவால்கள் பீட்டா தலைமுறையினர் தங்களைத் தகவமைத்துக்கொள்ளவழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய இரண்டு தலைமுறைகள் தங்கள் முன்னோடிகளைவிட சுற்றுச்சூழல் குறித்த உணர்வுடன் இருந்தபோதிலும், அதன் நிலைத்தன்மை பற்றிய கவலைகள் உருவாகவில்லை. ஆனால், பீட்டா தலைமுறையினர் அதனை உறுதிப்படுத்தும் பொறுப்பை ஏற்கவேண்டும். அவர்கள் தங்களின் தேவைகள், மதிப்பீடுகள், விருப்பங்கள் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் அவைதான் எதிர்கால சமூகத்தை வடிவமைக்கும் காரணிகளாக இருக்கும் என்றும் மார்க் எழுதியுள்ளார்.

மேலும், சமூக ஊடக தளங்களின் வளர்ச்சியால் நவீன உலகில் சமூகங்களுக்கு இடையேயான இணைப்பு ஏற்கனவே அரிதாக மாறிவிட்ட நிலையில், பீட்டா தலைமுறை உண்மையான இணைப்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


JOIN KALVICHUDAR CHANNEL