+2 முடித்துள்ள அரசு பள்ளி மாணவ , மாணவிகளுக்கான உயர் கல்வி .
7.5% கோட்டா என்றால் என்ன..?
*அரசுபள்ளியில் 6-12 வகுப்பு படித்த குழந்தைகளுக்கு அனைத்து தொழில் படிப்புகளிலும் வழங்கப்படும் சிறப்பு ஒதுக்கீடு 7.5% கோட்டாவில் இடம் பிடித்தால் கல்லூரி கட்டணம் & விடுதி கட்டணம் கிடையாது.
*RTE Act 2009 மூலம் தனியார் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்பு படித்த குழந்தைகளுக்கு 7.5% கோட்டா கிடைக்குமா..?
*கிடைக்கும் ஆனால் 9, 10, 11, 12 வகுப்புகளை தமிழக அரசுப்பள்ளிகளில் படித்திருக்க வேண்டும்.
*அரசுப்பள்ளியில் ஆங்கில வழியில் படித்தால் 7.5% கோட்டா உண்டா..?
*உண்டு
*BA, BSC, BCom, BCA படிக்க 7.5% கோட்டா உண்டா...?
*இல்லை.
*ஆனால் 7.5% கோட்டா குழந்தைளுக்கு புதுமைப்பெண் திட்டம் & தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 கிடைக்கும்.
7.5% கோட்டா எந்தெந்த படிப்புகளுக்கு உண்டு..?
*கீழ்காணும் தொழில் படிப்புகளுக்கு மட்டும் 7.5% கோட்டா உண்டு...
*MBBS BDS BSMS BUMS BAMS BHMS (NEET தேவை)
*BE through TNEA Counselling.
*B.V.Sc B.F.SC BSC (Agri) Hort. Forestry Sericulture BBA (Fishery Marketing)
*B.Tech. Agri Engi / Bio Tech / Bio Informatics / Dairy Tech.
*மொத்தம் எத்தனை பேருக்கு 7.5% கோட்டா Free Seats கிடைக்கும்..?
*BE படிப்பில் Phy,Che, Maths அதிக மதிப்பெண் எடுக்கும் சுமார் 11000-பேருக்கு Free Seats கிடைக்கும்
*பிற எல்லா படிப்புகளையும் சேர்த்து சுமார் 1000-பேருக்கு Free Seats கிடைக்கும்.
*BA, BSC, BCom, BCA படிக்க முதல் தலைமுறை பட்டதாரி சான்று தேவையா..?
*தேவையில்லை...!
*எந்த படிப்புகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்று வாங்க வேண்டும்...?
*MBBS, BDS, BE, Agri, BVSc, BFSC, B.Tech, BA, LLB போன்ற தொழில் படிப்புகளுக்கு இச்சான்று பயன்படும். அதுவும் 7.5 கோட்டாவில் சீட் கிடைத்தால் தேவையில்லை. SC, ST, SCA குழந்தைகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்று தேவையில்லை. 7.5% கோட்டா இல்லாத BC , MBC , BCM , DNC குழந்தைகளுக்கு மட்டும் இச்சான்று பயன்படும்.
*முதல் தலைமுறை பட்டதாரி சான்றின் பயன் என்ன..?
*உங்கள் கல்லூரி Tuition Fees ல் 50% ஐ அரசு செலுத்தும்.
*PSTM - Persons Studied Under Tamil Medium கோட்டா என்றால் என்ன?..?
*7.5% கோட்டா என்பது அரசு பள்ளியில் 6-12 வகுப்புகள் படித்த குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்படும் சலுகை.
*PSTM கோட்டா என்பது 1-12 வகுப்புகள் அனைத்தையும் Tamil Medium வழியாகவும் தொடர்ந்து கல்லூரி பட்ட படிப்பையும் Tamil Medium வழியாகவும் படித்து முடிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் TNPSC , TRB , USRB வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் 20% சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி டிகிரி வரை தமிழ் வழியில் படித்தால் விரைவில் அரசு பணியில் (Govt. Job) சேரலாம்