பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
LINK 1 CLICK HERE
LINK 2 CLICK HERE
மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள்.
இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை 9 மணிக்கு வெளியாகும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட இருக்கின்றன.