t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -01.08.2025 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 July 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -01.08.2025






திருக்குறள்: 

குறள் 192: 

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
நட்டார்கட் செய்தலிற் றீது. 

விளக்க உரை: 

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

பழமொழி :
Believe in yourself and magic will happen. 

உன்னை நீ நம்பினால் அதிசயங்கள் நடக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.


2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

கோபம் வரும்போது ஒரு கணம் பொறுமையாக இருந்தால் நூறு நாள் துயரத்தில் இருந்து தப்பிக்கலாம் - சீனப் பொன்மொழி

பொது அறிவு : 

01. இந்தியாவில் "வெண்மை புரட்சியின் தந்தை"என்று அழைக்கப்படுபவர் யார்?


Dr.வர்கீஸ் குரியன்
Dr. Verghese Kurien

02.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் எது?

ஐ.என்.எஸ்.விக்ராந்த்
I. N. S.Vikrant
English words :

cabin - a small room in a ship or boat where people sleeps.கப்பலில் உள்ள துயிலறை

Grammar Tips: 

Sion rules 

If the base word ends with d, de, or se

Add 'sion'

Example 

Decide -decision
Expand -expansion
Collide-collision
Confuse-confusion 

அறிவியல் களஞ்சியம் :

 உணவுப் பாதை போடுவது போலவே, ஆபத்து ஏற்படுவதையும் வேறொரு வேதிப்பொருளை வெளியிட்டு சிப்பாய் எறும்புகள் எறும்புக் காலனிக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகின்றன. இதை அறிந்து மற்ற எறும்புகள் தப்பிச் செல்லும். அதேபோல ஆண் எறும்பை இனப்பெருக்கம் செய்ய ஈர்க்கவும் ராணி எறும்புகள் ஒரு வகை ஃபெரமோனை வெளியிடுகின்றன.

ஆகஸ்ட் 01

பால கங்காதர திலகர் அவர்களின் நினைவுநாள்

பால கங்காதர திலகர் (சூலை 23, 1856 –1 ஆகத்து 1920) (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.
நீதிக்கதை

 ஆசை

விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார். 

ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான். 

நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

நீதி :
விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

இன்றைய செய்திகள்

01.08.2025

⭐நலம் காக்கும் ஸ்டாலின் புதிய மருத்துவ திட்டம் -ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

⭐தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

⭐இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ICC இரண்டு அடுக்கு டெஸ்ட் கிரிக்கெட் சிஸ்டம்: 
முன்னணி 6 அணிகள் ஒரு பிரிவாக பிரிக்கப்படும்.

🏀 இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரில் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு: இதில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.


Today's Headlines

⭐ Stalin New Medical Program - Health Care Plan will start from August 2nd.

 ⭐ Health Department Warning about the fast spreading of Dengue Fever in Tamil Nadu.

⭐ US President Donald Trump has announced that 25% of tariffs will be imposed on imports of Indian goods.

🏀 Sports News

🏀 ICC two-tier Test Cricket System: The leading 6 teams will be divided into a category.

🏀 England and India Test series: India won the toss and chose to bowl. 
 If India wins, the series will be balanced.


JOIN KALVICHUDAR CHANNEL