t> கல்விச்சுடர் மடம் கொன்று அறிவகற்றும் கல்வி - அஜந்தா தேவி - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

29 July 2025

மடம் கொன்று அறிவகற்றும் கல்வி - அஜந்தா தேவி

மடம் கொன்று அறிவகற்றும் கல்வி

    புதுக்கவிதை


எதிர்காலம் சிறக்கும்.
அறியாமை அகற்றும்;
அழுக்காறு நீக்கும்
கிளர்கதிர் கல்வி. 

பெண்ணடிமைப் போக்கும்
தன் உரிமை உணர்த்தும்
பாதுகாப்பு அளிக்கும்
பரன் கரம் கல்வி ! 

அதிகாரம் அளிக்கும்
அவனியை புரக்கும் 
ஆற்றல்மிகு அணுபோல் 
அகிலம்தனை புரட்டும் ! 

சோம்பலாய் சுருளாதே
சுகவாழ்வில் மயங்காதே
அலைபேசியில் அமிழாதே
விழித்திருந்து கற்பாய் நீ 

கல்வி கற்றல் கடினம் போ
என்றெண்ணி பழித்திடாமல் 
ஆசையுடன் நீயும் கற்றால்
மாற்றிடலாம் மாறா விதியை ! 

கல்வி சுவை கற்கண்டு
கன்னல் அனைய கனித் துண்டு
மின்னல் போல் ஒளிப்பிழம்பாய்
ஒளி பெறுவாய் ஒளியே தருவாய் ! 

அஜந்தா தேவி

JOIN KALVICHUDAR CHANNEL