t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2025 - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

4 August 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2025





திருக்குறள்: 

குறள் 212: 

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு         

விளக்க உரை: 

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

பழமொழி :
The roots of education are bitter,but the fruit is sweet. 

கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழம் இனிப்பாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.

2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

இந்த உலகில் நம் கண்ணுக்குத் தெரியும் மனிதர்களை நேசிக்கத் தெரியாவிட்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளின் மீது அன்பு செலுத்தி எந்த பயனும் இல்லை - அன்னை தெரசா

பொது அறிவு : 

01.தும்பா ராக்கெட் ஏவுதளம் எங்கு உள்ளது?


திருவனந்தபுரம்- கேரளா
Trivandrum- Kerala

02.இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்? 

டி. ஐசன் ஹோவர்-1959
D. Eisenhower -1959
English words :

sector - a part of an area or country or of a large group of people.ஒரு நாட்டின் அல்லது ஒரு பெருங் குழுவின் கிளைப்பகுதி.

Grammar Tips :

Difference between time and period 



Time can be general

Ex: "The meeting is at 2 PM."(No point of ending)

The period is more specific and defined. 


Ex: "The rainy period lasted for a month."(Both beginning and end)

அறிவியல் களஞ்சியம் :

 அன்டிரியஸ் வெசலியஸ் (Andreas Vesalius) (1514-64) என்பவர் தாம் தற்கால உடலுறுப்பியல் (Modern anatomy) பற்றி அடிக்கல் இட்டு ஆய்வு தொடங்கியவர். மருத்துவக் குடும்பத்தில் பிரஸ்ஸலில் (Brussels) பிறந்தவரானார். ஐரோப்பாவிலுள்ள மிகப் பெரிய மருத்துவ மையங்களுள் ஒன்றான இத்தாலியில் (Italy) உள்ள பதுஆ (Padua) வில் தன் 23 ஆம் வயதில் உடலுறுப்பியல் பேராசிரியரானார்.

ஆகஸ்ட் 04

பராக் உசைன் ஒபாமா அவர்களின் பிறந்தநாள்

பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகத்து 4, 1961), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
நீதிக்கதை

 வல்லவர் யார்?



ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது. அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது. 



மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்றுவிட்டது. பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம். அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது. 

அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப்போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது. பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது. 



எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது. 



நீதி :

எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு.


இன்றைய செய்திகள்

04.08.2025

⭐பொறியியல் கல்லூரிகள்: முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு.

⭐விமானத்தின் உள்ளே சக பயணியை தாக்கிய நபருக்கு இண்டிகோ விமானத்தில் வாழ்நாள் பயணத் தடை.

⭐ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை ராணுவ வீரர் காயம்.

⭐இந்தோனேசியாவில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய எரிமலை

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி பந்தில் வெற்றி

🏀ஆசிய கோப்பை டி20 தொடர்: துபாயில் மோதும் இந்தியா பாகிஸ்தான்


Today's Headlines

⭐Engineering Colleges: First Year Classes Commencement Date Announced.

⭐Lifetime Ban in the IndiGo Flight for Man Who Attacked Fellow Passenger Inside the IndiGo Flight.

⭐ In Jammu and Kashmir,3 terrorists were shot and killed, and a soldier was injured.

⭐In Indonesia, there is a successive volcanic eruption.

 SPORTS NEWS 

🏀 2nd T20I vs Pakistan: West Indies won on the last ball 

🏀Asia Cup T20I Series: India vs Pakistan in Dubai



JOIN KALVICHUDAR CHANNEL