t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.09.2025 - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

17 September 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.09.2025



திருக்குறள்: 

குறள் 461: 
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் 
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

விளக்க உரை: 

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

பழமொழி :
Time is a silent teacher.             

காலம் ஒரு அமைதியான ஆசிரியர்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.]


2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப் போவது மரியாதைக்குரியது- ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு : 

01. இந்தியாவில் விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

             டிசம்பர் 23- December 23

02. பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய பெண்மணி யார்?

          திருமதி. இந்திரா காந்தி

Mrs.Indira Gandhi

English words :

stand up – support, உறுதுணையாக நிற்றல். stand for – represent, ஒரு நபருக்காக அல்லது மக்களுக்காக செயல் படுதல் அல்லது பேசுதல்

Grammar Tips: 

 Some common mistakes with close and the correct form 
1. Close the pen –X
       Cap the pen ✓
2. Close the curtains X
        Draw the curtains ✓
3. Close the jar X
      Tighten the lid ✓
4. Close the umbrella X
       Fold the umbrella ✓
  5. Close your shirt X
    Button your shirt ✓

அறிவியல் களஞ்சியம் :

 ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 'மெகாலோபிகி ஓபெர்குலாரிஸ்' எனும் ஒருவகை புழுவின் முடியிலிருந்து எடுக்கப்படும் சில மூலக்கூறுகளுக்குப் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் இதிலிருந்து புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கபடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 17

பெரியார் பிறந்த தினம் - சமுக நீதி நாள்


பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை.
நீதிக்கதை

இயல்பு

 இரு துறவிகள் ஆற்றில் தவம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேள் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தனர். உடனடியாக ஒரு துறவி அந்த தேளை எடுத்து ஆற்றங்கரையில் விட்டார். அப்போது அத்தேள் அவரைக் கடித்துவிட்டது.

சிறிது நேரத்தில் திரும்பவும் அத்தேள் ஆற்றில் விழுந்து விட்டது. மீண்டும் அத்துறவி அதனை எடுத்து கரையில் விடும் போது அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது. இதனைக் கண்ட இன்னொரு துறவி, ”நண்பரே , தேள் கொட்டும் எனத் தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் அதனைக் காப்பாற்ற எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.


துறவி சொன்னார்: “கொட்டுவது தேளின் இயல்பு. காப்பாற்றுவது எனது இயல்பு”

இன்றைய செய்திகள்

17.09.2025

⭐தமிழகத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

⭐ஆயுதபூஜை, தீபாவளி: நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் அறிவிப்பு: நாளை முன்பதிவு தொடக்கம்..!

⭐சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..!

⭐தமிழ்நாட்டிற்கு உரங்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin inaugurated 4 new industrial parks in Tamil Nadu. 

⭐ Special trains are announced for Ayudha Puja and Diwali to Nellai, Nagercoil and Thoothukudi. Bookings start from tomorrow onwards.

⭐Chennai - Nellai Vande Bharat train coaches' number increased to 20.

⭐Chief Minister's letter to Prime Minister Modi seeking urgent action to provide fertilizers to Tamil Nadu.

 *SPORTS NEWS* 

🏀This is the second time that Vaishali has won the Grand Chess Tournament. She was directly qualified for the Candidates Chess Tournament which is to be held next year.



JOIN KALVICHUDAR CHANNEL