t> கல்விச்சுடர் கனமழை காரணமாக இன்று ( 16.10.2025 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

16 October 2025

கனமழை காரணமாக இன்று ( 16.10.2025 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்





தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நேற்று இரவு முதலே தென் மாவட்டங்களில் கனமழை விடிய விடிய பெய்து வருகிறது.

இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


ஒரு நாள் மட்டும் விடுமுறை

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று 16.10.2025 ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு இரா.சுகுமார் இ.ஆ.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

தென்காசி பள்ளிகளுக்கு விடுமுறை

அதேபோல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், தென்காசி மாவட்டத்திற்கு இன்று கன மழைக்கான ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் உத்தரவு வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி பள்ளிகளுக்கு விடுமுறை

அதேபோல் தூத்துக்குடி மாவடட்த்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL