t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2025 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 November 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2025



திருக்குறள்:

குறள் 522: 

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா 
ஆக்கம் பலவுந் தரும்.

விளக்க உரை: 

அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

பழமொழி :
There is no elevator to success; you have to take the stairs. 

வெற்றிக்குப் பக்கவழி இல்லை. ஒவ்வொரு படியையும் ஏற வேண்டும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.


2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.

பொன்மொழி :

எல்லா உயிரிடமும் அன்பாக இரு .அன்பே உயிரின் இயல்பு. அனைவரிடமும் அன்புடன் பழகு - மகாவீரர்

பொது அறிவு : 

01. "உள்ளாட்சி அமைப்பின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார்.?


ரிப்பன் பிரபு

02.மக்களாட்சி(Democracy) எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது.?

கிரேக்கம்

English words :

i.e, in other words

e.g, for example

தமிழ் இலக்கணம்: 

 வாழ்த்துக்கள் என்று எழுதுவது தவறு. வாழ்த்துகள் என்று எழுதுவதே சரி. ஏனெனில் 3 மெய்யெழுத்துக்கள் ஒரே வார்த்தையில் சேர்ந்து வராது.

நச்சென்று பேசினான் என்று சொல்வது தவறு. ஏனெனில் நச்சு என்றால் நஞ்சு என்று பொருள் படும். எனவே நறுக்கென்று பேசினான் என்று சொல்வதே சரி.
நவம்பர் 21

சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் நினைவுநாள்


சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்

உலகத் தொலைக்காட்சி நாள் 

உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
நீதிக்கதை

 நல் ஒழுக்கம் நம்மை காக்கும்



நல்லூரில் பரத் என்ற ஒரு சிறுவன் இருந்தான் அவன் நல்ல பையன் ஆனால் அவனிடம் சில குறைபாடுகள் இருந்தன அவன் சோம்பேறி. தன்னிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. சாப்பிட்ட பொருட்களை அங்கங்கே போட்டு விடுவான். கடலை சாப்பிட்டால் கடலை தோல் அவன் காலடியில் இருக்கும். ஆப்பிள் அல்லது திராட்சை சாப்பிட்டால் அப்பழங்களின் விதைகள் அங்கே கிடக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் வாழைப்பழத் தோலை அப்படியே போட்டு விடுவான். பெற்றோர் எவ்வளவு அறிவுறுத்தியும் குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவதில்லை. பெற்றோர்கள் பலமுறை சொல்லியும் தன் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. தான் இருந்த இடத்திலேயே போட்டு விடுவான். பெற்றோர் அன்பாக சொல்லிப் பார்த்தார்கள், திட்டி பார்த்தார்கள் அடித்தும் பார்த்தார்கள் ஆனாலும் அவன் திருந்துவதாக இல்லை அவனே ஒரு நாள் அடிபட்டு திருந்துவான் என்று சொல்லி பெற்றோர் அப்படியே விட்டு விட்டார்கள். ஒரு நாள் அவன் தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு எப்பொழுதும் போல் வாழைப்பழத் தோலை தெருவில் போட்டான். அப்பொழுது அவன் அம்மா அவனை கூப்பிட்டு சத்தம் போட்டு யாராவது அதில் நடந்தால் வழிக்கி விழுந்து விடுவார்கள் என்றார்கள். யாராவது தானே விழுவார்கள் என்று சொல்லி பதில் சொல்லிவிட்டு அவன் வீட்டுக்குள் போய் விட்டான். வீட்டுக்குள் போய் இரண்டு நிமிடம் கழித்து அவனுடைய நண்பன் தெருவில் நின்று பரத் வருகிறாயா நாம் விளையாட போகலாம் என்று கூப்பிட்டான். இவன் வேகமாக நண்பனுடன் செல்ல ஓடி வந்தான். இவன் போட்ட வாழைப்பழ தோல் அங்கேயே இருந்தது. அதன் மீது காலை வைத்து வழிக்கு கீழே விழுந்தான். தலையிலும் முதுகிலும் நல்ல அடிபட்டுவிட்டது. அதன் பிறகு அவனை மருத்துவரிடம் அழைத்து சென்று ஊசி போட்டு காயங்களுக்கு மருந்து போட்டு மாத்திரைகள் எல்லாம் அவனுக்கு கொடுத்து அவன் சரி ஆவதற்கு பத்து நாட்களுக்கும் மேலாக ஆகிவிட்டது. அவனுடைய அம்மா சொன்னார்கள் நீ அந்த வாழைப்பழத் தோலை எடுத்து குப்பை கூடையில் போட்டிருந்தால் இன்று உனக்கு இவ்வளவு கஷ்டமா? முதுகில் நல்ல அடி. நீ பள்ளி செல்வதற்கு இன்னும் பத்து நாட்களுக்கு மேல் ஆகும் என்று டாக்டர் சொல்லிவிட்டார் என்று கூறினார்கள்.‌ இப்பொழுது பரத் தன் தவறை உணர்ந்து கொண்டான். இப்பொழுது எல்லாம் பரத் சுறு சுறு பரத்தாக சுத்த பரத்தாக மாறிவிட்டான்.

நீதி: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 

பெற்றோருக்கு கீழ் படியும் போது நாம் வாழ்வில் மேல் படிக்கு செல்வோம்

இன்றைய செய்திகள்

21.11.2025

⭐ கியூஆர் குறியீடுகள் - ரெயில் நிலைய உணவகங்கள் மற்றும் கடைகளில் இடம்பெற்றிருக்கும்.உணவு பொருட்கள் தரமில்லாவிட்டால் கியூஆர் குறியீடு மூலம் புகார் செய்யலாம்.

⭐கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

⭐பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக பதவி ஏற்றார் நிதிஷ்குமார்.

⭐டாங்கி எதிர்ப்பு ஏவுகணை-பீரங்கி குண்டுகள்: இந்தியாவுக்கு ரூ.823 கோடி ஆயுதங்கள் விற்பனை-அமெரிக்கா அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் மூன்றாவது பழங்குடி வீரராக டாகெட் இடம் பெற்றுள்ளார்.

Today's Headlines

⭐QR codes are installed in Railway station restaurants and shops. If the food items are of poor quality, you can complain through the QR code.

⭐M.K.Stalin inaugurates refrigerated Goods storage warehouses in the Koyambedu market complex.

⭐Nitish Kumar took oath as the Chief Minister of Bihar for the 10th time.

⭐Anti-tank missiles-artillery shells. Rs. 823 crore arms sale to India-US announcement

 SPORTS NEWS 

🏀Australia squad announced for first Test against England. Daggett becomes the third Aboriginal player in Australia's squad.


JOIN KALVICHUDAR CHANNEL