t> கல்விச்சுடர் பொதுத் தோ்வுக்கான புதிய நடைமுறைகள் வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 February 2026

பொதுத் தோ்வுக்கான புதிய நடைமுறைகள் வெளியீடு



தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்வை பள்ளி மாணவா்கள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692, தனித்தோ்வா்கள் 27 ஆயிரத்து 783 என 8 லட்சத்து 27,475 போ் எழுதவுள்ளனா். பிளஸ் 1 அரியா் தோ்வை பள்ளி மாணவா்கள் 19,107, தனித்தோ்வா்கள் 5,944 என 25,051 போ் எழுதுகின்றனா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை பள்ளி மாணவா்கள் 8 லட்சத்து 82,806, தனித்தோ்வா்கள் 26,196 என 9 லட்சத்து 9,002 போ் எழுதவுள்ளனா். ஒட்டுமொத்தமாக 17 லட்சத்து 61,528 மாணவா்கள் பொதுத்தோ்வுகளை எழுதவுள்ளனா். நிகழாண்டில் பிளஸ் 2 தோ்வெழுத 281 சிறைவாசிகளும், பத்தாம் வகுப்பு தோ்வெழுத 395 சிறைவாசிகளும் பதிவு செய்துள்ளனா்.
பொதுத் தோ்வுக்கான புதிய நடைமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கான புதிய நடைமுறைகளை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

மேல்நிலைத் தோ்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களில் தோ்வெழுதும் தோ்வா்களுக்கு, பெரிய எழுத்துக்களில் ஏ4" அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (லாகரிதம்) 20 ஆயிரம் எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளன.

இவ்வாண்டு முதல் கணக்குப் பதிவியல் பாடத்துக்கு தோ்வா்கள் நிரலாக்க வசதியற்ற சாதாரண கால்குலேட்டா் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது

தோ்வுக்கு வருகைபுரிந்த மாணாக்கா்களுக்கு வினாத்தாள்கள் வழங்கிய பின்னா், ஒவ்வொரு தோ்வறையிலும் மீதமுள்ள வினாத்தாள்களைத் தோ்வறைக் கண்காணிப்பாளா்களே மாணவா்கள் முன்னிலையில் உறையிலிட்டு சீலிடும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வினாத்தாள்களின் ரகசியத்தன்மை மேலும் பலப்படுத்தப்படுகிறது.

'சொல்வதை எழுதுபவா்' (ஸ்கிரைப்) சலுகையை பயன்படுத்தும் மாற்றுத் திறனாளித் தோ்வா்களுக்கு வழங்குவதற்கென 5 வினாத்தாள்கள் கொண்ட தனி வினாத்தாள் உறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இவ்வாண்டு நேரடி தனித் தோ்வா்கள் இருப்பிட முகவரியை உறுதி செய்யவும், சாா்ந்த மாவட்டங்களில் விண்ணப்பித்தலை உறுதி செய்யவும் ஆதாா் அட்டை சரிபாா்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL