t> கல்விச்சுடர் IFHRMS : தவறான Tax பிடித்தத்தைச் சரி செய்ய Elements அறிமுகம்!செல்வ.ரஞ்சித் குமார் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 February 2026

IFHRMS : தவறான Tax பிடித்தத்தைச் சரி செய்ய Elements அறிமுகம்!செல்வ.ரஞ்சித் குமார்

IFHRMS : தவறான Tax பிடித்தத்தைச் சரி செய்ய Elements அறிமுகம்!

செல்வ.ரஞ்சித் குமார்

முறைப்படியான Income Tax கணக்கீட்டிற்கும் IFHRMS Tax பிடித்தத்திற்கும் வேறுபாடுகள் இருப்பின் பிப்ரவரி 2026 மாத ஊதியத்தில் சரிசெய்து கொள்ள இரு புதிய Elements IFHRMSல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Income Tax & Cess உள்ளிட்டவற்றில் சரியான கணக்கீட்டிற்கும் IFHRMS கணக்கீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை,

Different Amount = Actual  - IFHRMS Deduction

என்ற கணக்கீட்டின் வழி வித்தியாசத் தொகையை இந்த Elementsல் அளித்து வருமானவரியைச் சரி செய்து கொள்ளலாம். அதாவது,

= Actual Amount - IFHRMS Deduction
= 10,000 - 10,500
எனில்,
Different Amount = -500

= Actual Amount  - IFHRMS Deduction
= 10,500 - 10,000
எனில்,
Different Amount = 500

Taxல் வேறுபாடு இருப்பின், Add element entryல் Effective Date Februaryயாக வைத்து *GTN Income Tax_A* என்ற Elementஐ Add செய்து Different Amountஐ உள்ளிடவும்.

இதே போன்று Cess வித்தியாசத் தொகையை *GTN Income Tax Cess_A* என்பதில் அதற்கான Different Amountஐ உள்ளிடவும்.

Approval பணிகள் முடிந்த பின்னர், February regular runஐ mark for retry செய்தால் சரியான Result கிடைக்கும்.

*'IFHRMSல பிடிச்சது பிடிச்சதுதானாம்; வரிய திருத்த முடியாது; கூடுதலா பிடிச்சத ITR செய்து வாங்கிக்கச் சொல்லிட்டாங்க'* என்போர் மறக்காமல் தங்களது ஊதியம் வழங்கும் அலுவலரை மீண்டும் தொடர்பு கொண்டு சரியான வரிப்பிடித்தத்தை மேற்கொள்ள வலியுறுத்துங்கள்.

JOIN KALVICHUDAR CHANNEL