t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.07.2026 - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

16 July 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.07.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:46 சிற்றினம் சேராமை

குறள் எண்:451

குறள்:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.  

பொருள்:

தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.

பழமொழி :
Experience is the best teacher.

அனுபவமே சிறந்த ஆசான்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன். 

2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.

பொன்மொழி : 

“மக்களுக்காக வாழ்வதே உண்மையான வாழ்க்கை.”

Thought for the Day :

The future belongs to those who believe in their dreams.

பொது அறிவு : 

1.சூரியன் உதிக்கும் நாடு எது? 

ஜப்பான்.

 2. சூரியன் மறையும் நாடு எது?

 பிரிட்டன். 

English words :

**Peculiar** - Strange or unusual, விசித்திரமான.

 **Sufficient** - Enough for a particular purpose, போதுமான.

புவியியலும் சுற்றுசூழலும் :

நாடுகள் நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் அல்லது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
உதாரணம்: இந்தியா – 28 மாநிலங்கள், 8 ஒன்றியப் பிரதேசங்கள்.

NMMS :

MAT 

"PAINTER" என்ற சொல்லில் எழுத்துகளை ஆங்கில அகர வரிசைப்படி வரிசைப்படுத்தி எழுதினால் தன் இடத்தை மாற்றிக் கொள்ளாத எழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?? 

 (1) 1. 

 (2) 2. 

 (3) 3. 

 (4) 4. 

 விடை: (2) 2

ஜூலை 16

தன்ராஜ் பிள்ளை அவர்களின் பிறந்தநாள்

நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை (பிறப்பு - சூலை 16. 1968, புனே) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தன்ராஜ் பிள்ளை தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அந்த ஆசிய போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை தன்ராஜ் பிள்ளை பெற்றார். அத்துடன் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அதற்கு முன்பாக 1966ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றது. இவை தவிர 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பட்டத்தையும் இவர் பெற்றார். 
நீதிக்கதை

"நேர்மையின் வெற்றி" ஒரு பள்ளியில் வெற்றி மற்றும் ஹேமந்த் என்ற இரு மாணவர்கள் படித்து வந்தனர். ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கியது. இருவரும் நன்றாகப்

படித்திருந்தாலும், கணிதப் பாடம் ஹேமந்துக்கு மிகவும் கடினமாக இருந்தது.

தேர்வு எழுதும்ப போது, ஹேமந்துக்கு சில கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை .

உடனே வெற்றியின் விடைத்தாளைப் பார்த்து காப்பி அடிக்க நினைத்தான்.

அதை கவனித்த வெற்றி, தனது விடைத்தாளை மறைத்துக்கொண்டு, "தவறான

மதிப்பெண்ணை விட நேர்மையான முயற்சிதான் உயர்ந்தது. உனக்குத் தெரிந்ததை மட்டும் எழுது," என்று மெதுவாகச் சொன்னான்.

ஹேமந்த் அந்த வார்த்தையைக் கேட்டதும் மனம் மாறினான். தனக்குத் தெரிந்த விடைகளை மட்டும் எழுதினான்.

முடிவுகள் வந்தபோது, வெற்றி அதிக மதிப்பெண் பெற்றான். ஹேமந்த்

எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் பெறவில்லை . ஆனால் ஆசிரியர்,

"மதிப்பெண்ணை விட நேர்மையே பெரிய செல்வம். இன்று நீ நேர்மையைத்

தேர்ந்தெடுத்தாய். அடுத்தத் தேர்வில் உழைப்பால் நிச்சயம் வெற்றி பெறுவாய்," என்று பாராட்டினார்.

அந்த நாளிலிருந்து ஹேமந்த் தினமும் நன்றாகப் படித்து, அடுத்தத் தேர்வில் தனது சொந்த முயற்சியால் வகுப்பின் முதல் ஐந்து இடங்களில் ஒன்றைப் பிடித்தான்.

நீதி:

"பரிட்சையில் காப்பி அடித்து பெறும் வெற்றி நிலைக்காது; நேர்மையாக உழைத்து பெறும் வெற்றியே என்றும் பெருமை தரும்.”

இன்றைய செய்திகள்

16.07.2026

🗒️தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்.

🗒️புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 புதிய எம்.டி.எஸ் படிப்புகள் அறிமுகம். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

🗒️இந்திய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், விரைவில் அதிவேகமாக செல்லும் மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀ஆசிய இளையோர் கைப்பந்து போட்டி -இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்.

🏀உலக கால்பந்து போட்டி -ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி  ஸ்பெயின் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Today's Headlines

🗒️ The Tamil Nadu government has added 150 more MBBS seats in government medical colleges, said Minister Arun Raj.

🗒️ The Puducherry Government Dental College has started two new MDS (Master of Dental Surgery) courses, announced Chief Minister Rangasamy.

🗒️ Union Minister Nitin Gadkari said that high-speed electric buses will soon be introduced in Indian cities to help reduce traffic congestion.

Sports News

🏀 In the Asian Youth Handball Championship, the Indian team has reached the quarter-finals.

🏀 In the World Football Tournament, Spain defeated France 2–0 and advanced to the final


JOIN KALVICHUDAR CHANNEL