t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.08.2026 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.08.2026



திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:463

குறள்:

 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

பொருள்:

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.  

பழமொழி :
Knowledge is power.

அறிவே ஆற்றல்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.

 2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

பொன்மொழி : 

மழை பெய்தால் மண் செழிக்கும்; நல்ல எண்ணம் இருந்தால் வாழ்க்கை செழிக்கும்.

Thought for the Day :

Every raindrop is a promise of a greener tomorrow.

பொது அறிவு : 

1. தமிழ்நாடு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

 ஜுலை 18. 

2. தமிழ்நாட்டின் மாநில மீன் எது? 

அயிரை மீன்.

English words :

Resilient – Recovers quickly, மீண்டு எழுபவர்.

Diligent – Works hard, விடாமுயற்சியாளர்

புவியியலும் சுற்றுசூழலும் :

இமயமலையின் சிறப்புகள்

உலகின் மிக உயரமான மலைத்தொடர்.

இந்தியாவை வடக்கிலிருந்து பாதுகாக்கிறது.

பல முக்கிய நதிகள் இங்கிருந்து தோன்றுகின்றன.

இந்தியாவின் காலநிலையைச் சீராக்க உதவுகிறது

NMMS :

SAT 

___________________ என்ற சிறிய துவாரத்தின் மூலம் ஒவ்வொரு செல்லும் அதன் அருகில் உள்ள செல்களுடன் இணைத்துக்கொள்கிறது.

 (1) நெமடோடா

 (2) பிளாஸ்மோடெஸ்மாட்டா

 (3) எக்கைனோடெர்மேட்டா

 (4) சைடோசால் 

 விடை: (2)பிளாஸ்மோடெஸ்மாட்டா

நீதிக்கதை

 வெள்ளத்தில் உயிர் காத்த வரீர்கள்

தொடர்ந்து பெய்த கனமழையால் நகரம் ஒன்றின் தாழ்வான பகுதி முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டது. பல குடும்பங்கள் தங்கள் வீடுகளிலேயே சிக்கிக்கொண்டனர். பள்ளி, தெருக்கள், வயல்கள் என எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கியிருந்தது.

அந்தச் சமயத்தில், அந்நகரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலரும்,இளைஞர் குழுவினரும் தன்னார்வமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.படகுகளின் உதவியுடன் வீடுவீடாகச் சென்று, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளை பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர்.

ஒரு வீட்டின் மாடியில் ஒரு பாட்டியும், இரண்டு சிறிய குழந்தைகளும் உதவிக்காக காத்திருந்தனர். அவர்களைப் பார்த்த இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் படகை செலுத்திச் சென்று, அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட மக்கள் நன்றியுடன் கண்ணீர் மல்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரும் அவர்களின் மனிதநேயச் சேவையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

அன்றைய தினம் அந்தப் பகுதி மக்கள் ஒரு உண்மையை உணர்ந்தனர். ஆபத்து நேரத்தில் மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களே உண்மையான வீரர்கள் என்பதை அனைவரும் புரிந்துக்கொண்டனர்.

நீதி:

ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது உயர்ந்த மனிதநேயப் பணியாகும்.

இன்றைய செய்திகள்

03.08.2026

🗒️காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பாக புதிய வழக்கு தொடர்வது  சார்பாக உச்சநீதி மன்றத்தை நாட தமிழக அரசு முடிவு.

🗒️ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு, 'லோகமான்ய திலகர்' தேசிய விருது அறிவிப்பு.

🗒️நீட்' முதுநிலை தேர்வு, இனி ஒரே 'ஷிப்ட்'டில் நடத்தப்படும்; மாணவர்கள் நலன் கருதி தேர்வுக்கான வினாக்களும் 200லிருந்து 180 ஆக குறைக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀காமன்வெல்த் போட்டி: அங்குஷ் பங்கல் அசத்தல்... குத்துச் சண்டையில் 7 தங்கம் குவித்த இந்தியா.

🏀காமன்வெல்த் போட்டியில் இந்தியா 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

🏀தைபே ஓபன் பேட்மிண்டன்:
 வியட்நாமின் நியூயென் து லின் உடன் மோதி இந்தியாவின் தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.

Today's Headlines

📰The Tamil Nadu government has decided to approach the Supreme Court to file a new case regarding the sharing of Cauvery river water.

📰National Security Adviser Ajit Doval has been announced as the winner of the Lokmanya Tilak National Award.

📰The NEET-PG exam will now be conducted in a single shift. For the benefit of students, the number of questions has also been reduced from 200 to 180, the Central Government said.

🏅 Sports News

🏀Commonwealth Games: India performed very well in boxing and won 7 gold medals. Ankush Panghal also gave an impressive performance.

🏀India is in 4th place in the Commonwealth Games medal table with 39 medals.

🏀Taipei Open Badminton: India's Tanvi Sharma defeated Vietnam's Nguyen Thu Linh and won the championship title.


JOIN KALVICHUDAR CHANNEL