t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.09.2026 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.09.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:487

குறள்:

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பொருள்:

அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்ய அந்தக்கணமே தன் சினத்தை வெளியே காட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்

பழமொழி :
No man can serve two masters

ஆற்றிலே ஒருகால் ; சேற்றிலே ஒரு கால் வைக்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“இளையோரின் தனித்திறமைதான் நாட்டின் மறைந்திருக்கும் பெரும் செல்வம்.”

Thought for the Day :

“The best investment a young person can make is in learning useful skills.”

பொது அறிவு : 

1.புதிய 2000 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 மங்கள்யான். 

2.புதிய 500 ரூபாய் நோட்டில் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 

 ரெட் ஃபோர்ட் ( டில்லி) . 

English words :

1. Candid – Truthful and straightforward, வெளிப்படையானவர்.

2. Magnanimous – Very generous and forgiving, பெருந்தன்மையானவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

"விவசாயத்திற்கு முக்கியத்துவம்
இந்திய கிராமங்களின் முதன்மையான தொழிலான விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்."

NMMS :

SAT 

பின்வரும் நிகழ்வுகளைக் காலக் கிரமப்படி வரிசைப்படுத்துக. 

 (i) ஆம்பூர் போர்

 (ii) பிளாசிப் போர் 

 (iii) வந்தவாசிப் போர்

 (iv) பெரும் புரட்சி

 (1) (i), (ii), (iii), (iv) 

 (2) (i), (iv), (iii) , (ii) 

 (3) (iii), (ii), (i), (iv) 

 (4) (iii), (iv), (i), (ii) 

 விடை: (1) (i), (ii), (iii), (iv)

செப்டம்பர் 03

சாக்சி மாலிக் அவர்களின் பிறந்தநாள்

சாக்சி மாலிக் (Sakshi Malik, செப்டம்பர் 3, 1992) இந்திய மற்போர் வீராங்கனையாவார்.[இவர் கிளாஸ்கோவில் நடந்த 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் கட்டற்றவகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.2014இல் தாஷ்கந்தில் நடந்த உலக மற்போர் போட்டிகளிலும் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றார்.2016 ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடைப் பிரிவில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதி 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாக்சி வெண்கலப் பதக்கம் வென்றார்.
நீதிக்கதை

 “சிறிது ஓய்வு… நிறைய வெற்றி!”

ஒரு சிறிய ஊரில் விக்னேஷ் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பில் மிகவும் ஆர்வமுள்ளவன். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று தினமும் இடை விடாமல் படித்துக்கொண்டே இருந்தான்.

“இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டும்… ஓய்வு எடுத்தால் நேரம் வீணாகிவிடும்!” என்று நினைத்து, விளையாடுவதையும் நண்பர்களுடன் பேசுவதையும் தவிர்த்தான்.

சில நாட்களில் அவனுக்கு படித்தது எதுவும் சரியாக நினைவில் நிற்கவில்லை .

சிறிய விஷயங்களுக்குக்கூட எரிச்சல் ஏற்பட்டது. இதைக் கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து,

“விக்னேஷ், மனதுக்கும் உடலைப் போலவே ஓய்வு தே வை . தொடர்ந்து படிப்பது மட்டும் வெற்றியைத் தராது. சிறிது நேரம் ஓய்வெ டுத்து, இயற்கை யை ரசித்து, பிடித்த விஷயங்களைச் செய்வதும் அவசியம்,” என்றார்.

அன்று மாலை விக்னேஷ் புத்தகங்களை மூடிவிட்டு சிறிது நேரம் வெளியே சென்று நடந்தான். நண்பர்களுடன் விளை யாடினான். வீட்டிற்கு வந்துஅமை தியாக இரவு உணவு சாப்பிட்டு, சரியான நேரத்தில் தூங்கினான்.

மறுநாள் காலை அவன் மனம் புத்துணர்ச்சியாக இருந்தது. படித்த பாடங்கள் எளிதாக நினைவுக்கு வந்தன. அப்போது அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது:

“ஓய்வு என்பது நேரத்தை வீணாக்குவது அல்ல; மீண்டும் சிறப்பாக செயல்படுவதற்கான தயாரிப்பு.” அதன்பிறகு விக்னேஷ் படிப்புக்கும் ஓய்வுக்கும் சரியான நேரத்தை ஒதுக்கி, மகிழ்ச்சியாகப் படிக்கத் தொடங்கினான்.

🌸 நீதி:

அதிகமாக கவலைப்படாமல், தேவையான நேரத்தில் ஓய்வு எடுத்தால் மனம் புத்துணர்ச்சி பெறும். மன அமைதியுடன் செயல்படும்போது வெற்றியும் எளிதாக கிடை க்கும்.

இன்றைய செய்திகள்

03.09.2026

🗒️சென்னை மெட்ரோவில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டம் காரணமாக  28 புதிய ரெயில்கள் வாங்க இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

🗒️ஜி.எஸ்.எல்.வி. எப்-17 மாதிரி ராக்கெட் வைத்து சிறப்பு பூஜை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம் செய்தனர்.

🗒️ரூ.1.25 கோடி நன்கொடை... வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனாவின்  ஒலிம்பிக் சாம்பியன் ஜெங் கின்வென்
 உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
 
*விளையாட்டுச் செய்திகள்* 

🏀21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் 2026 போட்டி லூதியானாவில் நடைபெற்று வருகிறது.

🏀100 மீட்டரில் புதிய வரலாறு... ஒரே நாளில் இருமுறை தேசிய சாதனையை தகர்த்த தமிழக வீரர் நீல் சாம்ராஜ்

Today's Headlines

🗒️ Due to the increasing number of passengers on the Chennai Metro, the railway administration plans to buy 28 new trains.

🗒️ ISRO scientists performed a special puja and prayer with a model of the GSLV-F17 rocket.

🗒️ ₹1.25 crore donation: Chinese Olympic champion Zheng Qinwen has extended a helping hand to people affected by the floods.

Sports News

🏀 The 21st National Youth Athletics Championship 2026 is being held in Ludhiana.

🏀 New record in the 100 metres: Tamil Nadu athlete Neel Samraj broke the national record twice in the same day, creating history.


JOIN KALVICHUDAR CHANNEL