t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.11.2026 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

4 November 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.11.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:53. சுற்றந் தழால்

குறள் எண்:523

குறள்:

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. 

பொருள்:

சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.

பழமொழி :
Too much of anything is good for nothing.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. என்னால் முடிந்த வரை இயற்கையை பாதிக்காத வகையில் நடந்துகொள்வேன் .

 2. என் பகுதியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளை அசுத்தப் படுத்தாமல் பாதுகாப்பேன்.

பொன்மொழி : 

மன அமைதியே மகிழ்ச்சியின் அடித்தளம்; தன்னம்பிக்கையே வெற்றியின் திறவுகோல். நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வை எதிர்கொள்வோம்!

Thought for the Day :

Peace of mind is the foundation of happiness; self-confidence is the key to success. Let us face life with positive thoughts!

பொது அறிவு : 

1. மயிலாடுதுறை தேரழுந்தூரில் ஆவணப்படுத்தப்பட்ட கல்வெட்டுகள் எந்த அரசை பற்றியது?

 முதலாம் ராஜராஜன். 

2. கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முறை கூட்டப்படுகிறது? 

ஆறு முறை.

English words :

1. Meticulous - நுணுக்கமான - Thorough

2. Eloquent - சொல்வளமுள்ள - Articulate

புவியியலும் சுற்றுசூழலும் :

1. முதுமலை தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயம்• அமைவிடம்: நீலகிரி மாவட்டம் (தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா முச்சந்திப்பில் அமைந்துள்ளது).
• சிறப்பு: இதுவே தமிழ்நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும் (1940). நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது.
• விலங்கினங்கள்: புலிகள், ஆசிய யானைகள், சிறுத்தைகள் மற்றும் அரிய வகை பறவைகள்.

NMMS 




விடை : (3)
நவம்பர் 04

வில்ஃபிரட் ஓவன் (Wilfred Owen, பி. மார்ச் 18, 1893 - இ. நவம்பர் 4, 1918) ஒரு ஆங்கிலக் கவிஞர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் படைவீரர். இவர் முதலாம் உலகப் போரின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். போர் நடந்த காலகட்டத்தில் போரையும் அதன் பின்னணி அரசியலையும் ஆதரித்து பரப்புரைக் கவிதைகளே வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், போர் முனையிலிருந்து கொண்டே போரின் கடுமையினையும் உண்மையையும் பிரதிபலிக்கும் வண்ணம் ஓவன் எழுதிய கவிதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஓவனின் நண்பரும் சக கவிஞருமான சிக்ஃபிரைட் சாசூன் சாதாரண போர் வீரனாக இருந்த ஓவனைக் கவிதை எழுதத் தூண்டினார். பதுங்கு குழி போர் முறையின் கொடூரங்களையும், நச்சுப்புகை தாக்குதல்களின் அவலங்களையும் ஓவனின் கவிதைகள் துல்லியமாக படம்பிடித்துக் காட்டின. 1918ல் போர் முடிவதற்கு ஒரு வாரம் முன்னர் போர்க்களத்தில் ஓவன் கொல்லப்பட்டார். 1919ல் அவரது கவிதைகள் அடங்கிய தொகுப்பு வெளியானது. வெளியாகி சுமார் நூறாண்டுகள் கடந்த பின்னரும், போர்க் கவிதை மரபில் ஓவன் அழியாத இடம் பெற்றிருக்கிறார். அவரது கவிதைகள் உலகெங்கும் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் இடம் பெற்று வருகின்றன.
நீதிக்கதை

அதிகாலையில் எழுவதன் நன்மை

ஒரு அழகான கிராமத்தில் விஜய், சஞ்சய் என்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். சஞ்சய் தினமும் இரவு நேரம் வரை தொலைக்காட்சி பார்த்துவிட்டு தாமதமாகத் தூங்குவான். காலையில் வெகுநேரம் கழித்தே எழுவான். இதனால் அவசர அவசரமாகப் பள்ளிக்குத் தயாராவான். காலை உணவைக்கூட சரியாகச் சாப்பிடாமல் பள்ளிக்குச் செல்வான்.

ஆனால், விஜய் தினமும் இரவு சரியான நேரத்தில் தூங்கிவிட்டு, அதிகாலையில் எழுவான். காலையில் பல் துலக்கி, உடற்பயிற்சி செய்து, சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வான். பின்னர் குளித்துவிட்டு, சத்தான காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாகப் பள்ளிக்குச் செல்வான்.

ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் இருவரிடமும், "காலையில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்.

அப்போது விஜய், "ஆசிரியரே ! அதிகாலை க்ஷயில் எழுவதால் நமக்குப் புத்துணர்ச்சியும் மன அமைதியும் கிடைக்கிறது. அன்றைய வேலைகளைப் பதற்றமின்றிச் செய்ய முடிகிறது. அதுமட்டுமின்றி, படிப்பதற்கும் விளையாடுவதற்கும் போதிய நேரம் கிடைக்கிறது" என்றான்.

இதைக் கேட்ட சஞ்சய் தன்னுடைய தவறை உணர்ந்தான். அன்று முதல் இரவில் சரியான நேரத்தில் தூங்கி, காலையில் சரியான நேரத்தில் எழும் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினான். நாளடை வில் சஞ்சயும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாறினான்.

நீதி:

"அதிகாலை யில் எழும் பழக்கம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தரும். சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுவோம்; ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்!" 🌞 

இன்றைய செய்திகள்

04.11.2026

🗒️திருமூர்த்தி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

🗒️தமிழ்நாட்டில் மறுசீரமைப்புக்கு பிறகு 56 வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு என தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தகவல்.

🗒️இந்தியா - அமெரிக்க முப்படைகளின் கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

விளையாட்டுச் செய்திகள்

🏀உலக பேட்மிண்டன் தரவரிசை: 6-வது இடத்துக்கு முன்னேறி பி.வி. சிந்து அசத்தல்.

🏀உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: ஆண்கள் 50 மீட்டர் பிஸ்டலில் இந்தியாவுக்கு தங்கம்.

Today's Headlines

HEADLINE NEWS
🗒️ The Tamil Nadu Government has announced that water will be released from the Thirumoorthy Dam today.

🗒️ After reorganisation, 56 more polling booths have been added in Tamil Nadu, said Election Commissioner Archana Patnaik.

🗒️ A joint military exercise between the Indian and US armed forces has started in Visakhapatnam.

🏀 SPORTS NEWS

🏀 World Badminton Rankings: P. V. Sindhu has achieved an impressive 6th place in the world rankings.

🏀 World Shooting Championship: India has won a gold medal in the Men's 50-metre pistol event.
Covai women ICT_போதிமரம்


JOIN KALVICHUDAR CHANNEL