. -->

Now Online

FLASH NEWS


Sunday 7 April 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி




ஆங்கிலம் என்றாலே அலறும் மாணவர்களை 15 நாட்களில் ஆங்கிலம் பேசவும்எழுத வைக்கும் மேலுார் சமூக சேவகர் முரளிதர சந்திரசேகரனை 60, கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.முரளிதர சந்திரசேகரன் எம்.எஸ்.சி., எம்.பில்., அமைதி விஞ்ஞானம் முடித்து, பால் பண்ணை நடத்தினார். கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலம் படிக்க முடியாமல் கல்வியை நிறுத்துவதை கண்டு வருந்தினார். பண்ணையை மூடி விட்டு கிராமங்களில் அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் கற்று கொடுக்க துவங்கினார். இவரிடம் ஆங்கிலம் கற்றவர்கள் சென்னை தலைமையகம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரிகின்றனர். முரளிதர சந்திரசேகரன் கூறியதாவது : அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் வீதம் 15 நாட்களில் 12 வகையான வினை, துணை விணை சொற்களை பயன்படுத்தி ஆங்கிலத்தில் வார்த்தைகளை உருவாக்கி பிழையின்றி எழுத, பேச கற்று கொடுக்கிறேன்

மாலை நேரங்களில் ஆங்கில மையம் மூலம் குறைந்த கட்டணத்தில் ஆங்கிலம் கற்று கொடுக்கிறேன் என்றார்.