. -->

Now Online

FLASH NEWS


Tuesday 30 April 2019

மாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதிகளை பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளலாம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் கல்வித்தகுதிகளை அவரவர் பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், எல்லா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 2011 -ம் ஆண்டு முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதிகளை படித்த பள்ளிகள் மூலம் நேரடியாக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டன. 


அதேபோல், இந்த ஆண்டும் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதிகளை படித்த பள்ளிகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி தேர்வு முடிவுகள் வெளியான பின் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் அந்தந்த பள்ளியிலேயே மாணவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட தினமே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படும். 


இதற்கு தேவையான படிவங்கள் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதை பூர்த்தி செய்து தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.