. -->

Now Online

FLASH NEWS


Wednesday 3 April 2019

School Morning Prayer Activities - 04.04.2019








பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள்:165

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.

உரை:

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

பழமொழி :


A honey tongue and a heart of gall

அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும்

பொன்மொழி:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

-அன்னை தெரசா

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :


1..”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?
பூடான்

2.”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?
அங்கோலா

நீதிக்கதை :

பாம்பும் விவசாயியும்
(The Farmer and the Snake Story in Tamil)






அது ஒரு அழகிய குளிர்காலம். ஒரு நாள் பாம்பு ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது.

அந்த நேரத்தில் அவ்வழியே வந்த விவசாயி ஒருவன் அந்த பாம்பினைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த விவசாயி அப்பாம்புக்கு உதவிட நினைத்தான்.


பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். விவசாயியின் உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள மெள்ள உணர்வு பெற்றது.

அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய விவசாயியை பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த அந்த விவசாயி தன் செய்கைக்காக வருந்தினான்.

பாம்பைப் பார்த்து "ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்று கூறிவிட்டு இறந்தான்.

நீதி: தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையாகவே முடியும்.

இன்றைய செய்தி துளிகள் : 


1) நடப்பாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் : உயர்கல்வித்துறை அறிவிப்பு

2) 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது : ஏப்.11க்குள் திருத்தி முடிக்க திட்டம்!

3) ஏப்.1, 2019-க்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம்  - வருமானவரித் துறை

4) பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதி: இந்தியாவில் அறிமுகம் செய்தது வாட்ஸ்-அப்

5) மயாமி ஓபன் டென்னிஸ் 4வது முறையாக பெடரர் சாம்பியன்