. -->

Now Online

FLASH NEWS


Thursday 16 May 2019

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை


மிழகத்தில் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பொறியியல் கல்லூரிகளின் இறுதித்தேர்வில் 6 பொறியிய்ல கல்லூரிகளை சேர்ந்த ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெற வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் அண்ணா பலைக்கழகத்தன் கீழ் 481 இணைப்பு அங்கீகார கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.





இந்த கல்லூரிகளுளின் பாட விவரம் மற்றும் தேர்வு போன்றவற்றை அண்ணா பல்கலைக்கழகமே செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது, பொறியியல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்கள் பொறியியல் கல்லூரிகளின் தரம் தெரிந்து கொள்ளும் வகையில், அண்ணா பலைக்கழகம் தர வரிசை பட்டியல் வெளியிட்டு உள்ளது.


அதுபோல, ஒவ்வொரு கல்லூரியின் தேர்ச்சி விகிதமும் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதனப்டி, கடந்த 2018 நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளில் பிஇ, பிடெக் மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.





இணையதள முகவரி:





https://aucoe.annauniv.edu/firstrankmedal.html





அதில் அண்ணா பல்கலைக்கழத்துடன் இணைந்துள்ள 481 பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.





இதில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.





அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள ஆறு கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.





61 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கு குறைவான மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர்





74 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்க விகிதத்தில் மட்டுமே மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.





3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன.





அவைகள், சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி 88.12 சதவீத தேர்ச்சியும்,கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி 85.57 சதவீத தேர்ச்சியும், நாமக்கல் விவேகானந்தா மகளிர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 81.65 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.





482 பொறியியல் கல்லூரிகளில் 422 கல்லூரிகள் 50% கீழ் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.





177 கல்லூரிகள் 50 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதத்திற்கு இடைப்பட்ட தேர்ச்சியை அடைந்துள்ளன.











கடந்த (2018) ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 150 கல்லூரிகளில் 50% தேர்ச்சி விகிதம் இருந்தது. ஆனால் நவம்பர் மாத தேர்வு முடிவுகளில் மொத்தம் 59 கல்லூரிகள் மட்டுமே 50% தேர்ச்சி விகிதம் கிடைத்துள்ளது.





அதுபோல அடாநாமஸ் (தன்னாட்சி) பெற்ற பொறியியல் கல்லூரிகளில் (தேர்வுத்தாள்களை படிக்கும் கல்லூரிகளிலேயே திருத்துதல்) கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.





இதில், முதல் 30 இடங்களை கடந்த முறை பிடித்த கல்லூரிகளின் தேர்ச்சி விகிதங்களின் நிலையில் மாற்றங்கள் இல்லை என்றும், இந்த 30 கல்லூரிகளில் 28 கல்லூரிகள் 60% மேல் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.