. -->

Now Online

FLASH NEWS


Saturday 18 May 2019

பள்ளி மாணவர்களுக்கான 'ஸ்மார்ட்' கார்டு; தயாரிக்கும் பணி மும்முரம்

திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கான 'ஸ்மார்ட்' அடையாள அட்டை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 'ஸ்மார்ட்' அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. 'எமிஸ்'சில் பதிவு செய்துள்ள விவரங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்க அடையாள அட்டை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கல்வி தகவல் மேலாண்மை மைய இணையதளத்தில் தலைமையாசிரியர்கள் மாணவர்களின் விவரங்கள் பிழையின்றி உள்ளதா என பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.'ஸ்மார்ட்' அடையாள அட்டையில் மாணவர் மற்றும் அவரது தாய், தந்தையின் பெயர் தமிழ், ஆங்கிலத்திலும், 'எமிஸ்' பதிவு எண், ரத்தப்பிரிவு, பிறந்த தேதி, வீட்டு முகவரி, தொடர்பு எண், பள்ளியின் பெயர் மற்றும் முகவரி சுருக்க முறையிலும், மாணவர்களின் புகைப்படமும் இடம் பெறும்.
தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு ஸ்மார்ட் அடையாள அட்டை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.ஜூன் 3 ம் தேதி பள்ளி திறந்ததும் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். புதிதாக சேரும் மாணவர்களின் விவரங்கள் 'எமிஸ்'சில் பதிவு செய்யப்பட்டு 2 வாரத்திற்குள் அடையாள அட்டை வழங்கப்படும் என சி.இ.ஓ., சாந்தகுமார் கூறினார்.