. -->

Now Online

FLASH NEWS


Tuesday 14 May 2019

தமிழை மொழிப்பாடமாக பயின்றவர்களுக்கு மட்டுமே வேலை தமிழ்நாடு மாநில அரசு அவசர ஆணை பிறப்பிக்க வேண்டும் புதுகை கலெக்டர் அலுவலகத்தில் மாணவர், இளைஞர் மன்றத்தினர் மனு

தமிழை ஒரு மொழிப்பாடமாக எடுத்து பயின்றவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என தமிழ்நாடு மாநில அரசு அவசர ஆணை பிறப்பிக்க வேண்டும் என புதுகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மாணவர், இளைஞர் மன்றத்தினர் கோரிக்கை மனுவை போட்டனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள மனுக்கள் பெட்டியில் தமிழ்நாடு சோசலிச மாணவர் மன்றம் மற்றும் இளைஞர் மன்றத்தின் சார்பில் போட்ட மனுவில், தமிழ்நாட்டில் படித்து முடித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து உள்ளோரின் எண்ணிக்கை சுமார் 1 கோடியை நெருங்கி விட்டது. இந்நிலையில் அண்மை காலமாக மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, ரயில்வே, எல்.ஐ.சி.தபால்துறை போன்றவற்றில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்தி தெரிந்தவர்கள் மட்டும் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநில அரசு பணிகள் மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை மற்றும் கூட்டுறவு போன்ற எந்த பணியாக இருந்தாலும் தமிழை ஒரு மொழி பாடமாக பயின்றவர்களுக்கு மட்டுமே வேலை என தமிழ்நாடு அரசு அவசர ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.