. -->

Now Online

FLASH NEWS


Sunday 5 May 2019

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு: ஏழை பெற்றோருக்கு விழிப்புணர்வு



நாடு முழுவதும், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, 14 வயதுக்குட்பட்ட ஏழை குழந்தைகள், இலவசமாக கல்வி பயில்வது, 2012ல், அமலுக்கு வந்தது. 2017 முதல், இலவச கல்விக்கு விண்ணப்பிப்பது, ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது. இத்திட்டத்தில் சேரும் குழந்தைகளுக்கு, வாய்மொழி வினாக்கள், இதர தகுதி, பெற்றோர் கல்வித்தகுதி எதுவும் கருத்தில் கொள்ளக் கூடாது.

நடப்பாண்டு விண்ணப்பிக்க, இம்மாதம், 18 கடைசி தேதி. இதுகுறித்த, விரிவான துண்டறிக்கையை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், நேற்று, சேலத்தின், பல்வேறு பகுதிகளில் வினியோகித்து, மக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், ஆளுயர விழிப்புணர்வு பதாகையை, கழுத்தில் தொங்கவிட்டபடி சென்று, விழிப்புணர்வு செய்தனர். சேலம், கிழக்கு மாநகர் சங்கத்தலைவர் பிரபாகர் கூறுகையில், ''தனியார் பள்ளிகளில், ஏழை குழந்தைகளுக்கு, இலவச கல்வியை வலியுறுத்தவே விழிப்புணர்வு பிரசாரம். 5,000 துண்டறிக்கையை அச்சிட்டு, ஏழை பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார். உதவி மையம்...: 'நீட்' தேர்வுக்கு, வெளிமாவட்டங்களிலிருந்து, சேலத்துக்கு வரும் மாணவர்களுக்கு உதவ, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், இன்று, ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.