t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.11.2025 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 November 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.11.2025






திருக்குறள்:

குறள் 545:

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு. 

விளக்க உரை: 

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

பழமொழி :
Small lessons build great wisdom. 

சிறிய பாடங்களை பெரிய அறிவை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் எனது கடமையை தவறாமல் செய்வேன்.

2.கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி செய்வேன்.

பொன்மொழி :

கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாமல் கிடைத்தது என்றைக்கும் நிலைக்காது - கவிஞர் கண்ணதாசன்.

பொது அறிவு : 

01.இந்தியாவில் அதிக நிலக்கரி வளம் உள்ள மாநிலம் எது?


ஜார்கண்ட் -Jharkhand

02. இந்தியாவில் முதன் முதலில் இரும்பு பாலம் என்று அமைக்கப்பட்டது?

லக்னோ-Lucknow
English words :

elegant-stylish

embrace-hug

தமிழ் இலக்கணம்: 

 * வல்லின 'ற' அடுத்து மெய்யெழுத்து வராது. 
மூன்று மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து ஒரு வார்த்தையில் வராது 

எ.கா. வாழ்த்துக்கள் தவறு 
வாழ்த்துகள் சரி

அறிவியல் களஞ்சியம் :

 நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
நவம்பர் 03


அமர்த்தியா சென் அவர்களின் பிறந்தநாள்

அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.

நீதிக்கதை

மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன். தலைநகரத்தை அடைவதற்கு முன் காட்டில் நண்பகல் நேரம் நானும், என் மனைவியும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அவள் மீது எங்கிருந்தோ வந்த அம்பு தைத்து உயிரிழந்து விட்டாள். எங்களுக்கு எதிரில் சற்று தூரத்தில் வேடன் அமர்ந்திருந்தான். அவன் தான் என் மனைவியைக் கொன்றவன். அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்றான். 

ஆனால் அந்த வேடனோ, அரசே, நான் குற்றமற்றவன். எந்த காரணமும் இன்றி நான் ஏன் அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும்? நான் அம்பு எய்தவில்லை என கதறினான். கொல்லப்பட்ட பெண்ணின் உடலையும், அவள் மீது தைத்திருந்த அம்பையும் பார்த்த ராஜவர்மனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. 

வேடனே, நீ வேறு விலங்குக்கு குறி வைத்து தவறுதலாக இந்தப் பெண் மீது பட்டிருக்கலாம் அல்லவா? எனக் கேட்டான். ஆனால், அப்போது தானும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததாக வேடன் சாதித்தான். வேடனின் வார்த்தைகளை நம்பாத மன்னன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். 

இந்த சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின், வெளியூர் சென்றிருந்த முதலமைச்சர் ராஜவர்மனைச் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி அவரிடம் விவாதித்தான். அந்தப் பெண்ணின் மீது தைத்த அம்பினைப் பார்த்த முதலமைச்சர், அரசே, இந்த அம்பினை கவனித்தீர்களா துருப்பிடித்திருக்கிறது. வேடர்கள் துருப்பிடித்த அம்பைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தப் பெண் உறங்கிய மரத்தின் மீது எப்போதோ இந்த அம்பு சிக்கியிருக்கிறது. அன்று அந்த அம்பு தற்செயலாக அந்தப் பெண் மீது விழுந்திருக்கலாம். வேடன் குற்றமற்றவன் என்றே தோன்றுகிறது என்றார். 

இதைக் கேட்டுப் பதறிய மன்னன், தவறான தீர்ப்பை வழங்கியதால் குற்ற உணர்வில் துடிதுடித்து இறந்தான். 

நீதி :

எப்பொழுதும் நேர்மையாக செயல்பட வேண்டும். 

இன்றைய செய்திகள்

03.11.2025


⭐குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்

⭐4,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.-3 ராக்கெட்

⭐ரஷிய எண்ணெய் கப்பல்-துறைமுகம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்று கோப்பையை கைப்பற்றியது.

🏀வாஷிங்டன் சுந்தர் அதிரடி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டி20-யில் இந்தியா அசத்தல் வெற்றி

🏀ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கனடா வீராங்கனை

Today's Headlines

⭐ The corporation wing decided on a new plan to sell recyclable materials from garbage dumps.

⭐ India's LVM-3 rocket launched with a 4,410 kg CMS satellite from Sriharikotta.

⭐Ukraine drone attack on Russian oil tanker at port.

 SPORTS NEWS 

🏀 The Indian women's team won the World Cup by defeating South Africa by 55 runs in the final.

🏀India won the 3rd T20 against Australia, and Washington Sundar was in action.

 🏀Hong Kong Open Tennis, a Canadian player won the championship title


JOIN KALVICHUDAR CHANNEL