. -->

Now Online

FLASH NEWS


Friday 24 May 2019

இன்ஜி., சேர்க்கை சிறப்பு பிரிவினர் பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பு

தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங மூலம் நடக்கிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2-ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆன்லைன் மூலமே கவுன்சிலிங்கிலும் பங்கேற்கலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவரவர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காக மாநிலம் முழுவதும் 42 உதவி சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.ஜூலை 20 முதல் 22 வரை சிறப்பு பிரிவுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. விளையாட்டு போன்ற சில சிறப்பு பிரிவுகளில் குறைந்த அளவே இடஒதுக்கீடு இருக்கும்.

அதற்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பர். இவர்களில் சிலர் பொதுப்பிரிவுக்கு மாற விரும்புவர். அதற்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி முதல்வர் வெங்கடாசலம் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் கூறியதாவது : ஜூன் 6 முதல் 11 வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். விளையாட்டு வீரர்கள் முன்னாள் ராணுவத்தினர் வாரிசு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவின் கீழ் பொறியியல் படிக்க விண்ணப்பித்து பொதுப்பிரிவுக்கு மாற விரும்பினால் சேவை மையத்தில் கடிதம் எழுதி கொடுத்து மே 31-க்குள் மாறி கொள்ளலாம்.ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு சேவை மையத்தை தேர்வு செய்தவர்கள் வேறு சேவை மையத்தை தேர்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் மூலம் அலைபேசி எண் இமெயில் முகவரியையும் மாற்றி கொள்ளலாம். இது அந்தந்த சேவை மையம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றனர்.