TNTET - November Exam Result
2025 - நவம்பர் 15, 16 -ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025-ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் I 15.11.2025 அன்றும் தாள்-II 16.11.2025 அன்றும் நடத்தப்பட்டது.
தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answer) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in-ல் 25.11.2025 அன்று Objection Tracker உடன் வெளியிடப்பட்டது.
தற்காலிக விடைக்குறிப்பிற்கு 25.11.2025 முதல் 03.12.2025 பிற்பகல் 5.00 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபணைகளை (Objections) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்காண் தேதிகளில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபணைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப்பின் வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வு எழுதிய தேர்வர்களது OMR விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன.
அரசாணை (நிலை) எண் 23 பள்ளிக் கல்வித் (TRB) துறை, நாள் 28.01.2026 ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
இத்துடன் இறுதி விடைக்குறிப்புகள் மற்றும் தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படுகிறது. தகுதிபெற்ற தேர்வர்களுக்கு 02.02.2026 பி.ப முதல் அவர்களது தகுதிச்சான்றிதழ் (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
TET - Paper I Result - Click here
TET - Paper II Result - Click here
Final Key - Download here