. -->

Now Online

FLASH NEWS


Friday 21 June 2019

அண்ணா பல்கலையில் 2 பாடப்பிரிவுகள் மூடல் 270 இன்ஜி., இடங்களுக்கு முழுக்கு

அண்ணா பல்கலை கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைவால் இந்த ஆண்டு 270 இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் இன்ஜினியரிங் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதாவது அண்ணா பல்கலையின் கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி. ஆகியவற்றிலும் அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளிலும் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள 20 கல்லுாரிகளில் 2018ல் 9110 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஆண்டு 270 இடங்கள் குறைக்கப்பட்டு 8840 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

குரோம்பேட்டை எம்.ஐ.டி.கல்லுாரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ற பாட பிரிவில் 60 மாணவர்கள் இதுவரை சேர்க்கப்பட்ட நிலையில் 2018ல் காலி இடங்கள் அதிகமாகின. அதனால் இந்த ஆண்டு இந்த பாடப்பிரிவு மூடப்பட்டுள்ளது.கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரியில் மட்டும் 210 இடங்கள் குறைந்துள்ளன. அதில் வேளாண் மற்றும் நீர்பாசன இன்ஜினியரிங்கில் மாணவர்கள் சேர முன் வராததால் அந்த பாட பிரிவு மூடப்பட்டுள்ளது.ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் 20; இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் 20; மெட்டீரியல் சயின்ஸ் 30; பிரிண்டிங் டெக்னாலஜி 20; மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாட பிரிவில் தமிழ் வழியில் தலா 30 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.