. -->

Now Online

FLASH NEWS


Monday 15 July 2019

தேர்தல் பயிற்சி வகுப்புக்கு 'ஆப்சென்ட்': பணியிட மாறுதல் எச்சரிக்கை: கலெக்டர்



தேர்தல் பயிற்சிக்கு வராதவர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுவார்கள், என, கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்தார்.

வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் ஆக., 5ல் நடக்கிறது. இதற்காக, 690 இடங்களில், 1,553 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில், 7,576 ஆசிரியர், அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு, நான்கு கட்டமாக பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முதல் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. சட்டசபை தொகுதி வாரியாக, ஆறு இடங்களில் பயிற்சி வகுப்பு நடந்தது.

வேலூரில் நடந்த பயிற்சியை, கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு பேசியதாவது: ஓட்டுச்சாவடியில், சிறிய தவறுகள் நடந்தால் கூட, மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதனால், கவனமுடன் பணியாற்ற வேண்டும். வேலூர் தொகுதியில், சராசரி ஓட்டுப்பதிவு, 78 சதவீதமாகும். தொடர் விழிப்புணர்வால், கூடுதல் ஓட்டுகள் பதிவாகியிருந்தால், அந்த ஓட்டு மையத்தில் பதிவான ஓட்டுகள் மறு நாளில் சரி பார்க்கப்படும். இன்றைய பயிற்சியில், பலர் கலந்து கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது. பயிற்சிக்கு வராதவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், அங்கிருந்த மாதிரி ஓட்டுப்பதிவு மையத்தில், முதல் முறையாக தேர்தல் பணிக்கு வந்தவர்களுக்கு, செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.