. -->

Now Online

FLASH NEWS


Wednesday 17 July 2019

PG TRB : 'ஆன்லைன்' தேர்வை எதிர்த்து வழக்கு

PG TRB : 'ஆன்லைன்' தேர்வை எதிர்த்து வழக்கு




முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வை'ஆன்லைனில்' நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மனுவுக்கு பதில் அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்த மனு:முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து 2019 ஜூனில் டி.ஆர்.பி. எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. ஆன்லைனில் கணினி வழியாக தேர்வு நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

கணினியில் பயிற்சி பெறாதவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுதுவது மிகவும் கடினம். கணினி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தலாம். முதுகலை வணிகவியல் மற்றும் பி.எட். பட்டம் பெற்றுள்ள என்னைப் போன்ற பலரால் கணினி வழியாக ஆன்லைன் தேர்வு எழுதுவது சிக்கலை ஏற்படுத்தும்.எனவே ஆன்லைன் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். முன்பு இருந்ததுபோல் எழுத்து தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மனு நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை ஜூலை 23க்கு தள்ளிவைத்தார்