. -->

Now Online

FLASH NEWS


Wednesday 7 August 2019

அத்திவரதர் விழா.. 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை.. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 9 நாள்கள் தொடர்ந்து லீவு

காஞ்சிபுரம்: அத்திவரதர் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 3 நாள்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் மூலவர் அத்தி வரதர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்த சரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதன்படி கடந்த 1979ம் ஆண்டுக்கு பிறகு அத்தி வரதர் விழா வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். 40 வருடத்துக்கு ஒருமுறை அருள் பாலிக்கும் அத்தி வரதரான பெருமாளை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசித்துவிட வேண்டும் என எண்ணி பக்தர்கள் நாள்தோறும் காஞ்சிபுரம் குவிந்து வருகிறார்கள் இதனால் காஞ்சிபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனிடையே காஞ்சிபுரம் நகரில் மட்டும் பள்ளிகள் கடந்த ஜூலை 1ம் தொடங்கி வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இப்போதும் அப்படித்தான பள்ளிகள் அரைநாள்கள் மட்டுமே இயங்குகின்றன. இந்நிலையில் அத்திவரதர் வைபம் இறுதிகட்டதை எட்டியுள்ளதால் தினமும் 3லட்த்துக்கும் அதிமான பக்தர்கள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கட்டும்.. கருணாநிதிக்கு இதயப்பூர்வமான அஞ்சலி.. மைத்ரேயன் பரபர பதிவு இந்த சூழலில் உள்ளூர் மக்கள் அத்திவரதரை விழாவை கொண்டாடுவதற்கு வசதியாகவும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு வசதியாகவும் ஆகஸ்ட் 13,14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 13, 14 மற்றும் 16ந் தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அன்றை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இடையில் உள்ள ஆகஸ்ட் 12 பக்ரீத் மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் மற்றும் ஆக்ஸ்ட் 17சனிக்கிழமை, ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைக்கும் விடுமுறையாகும்.இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை முதல் அடுத்த வாரம் ஆக்ஸ்ட் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 9 நாள்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. அத்தி வரதர் விழா வரும் ஆகஸ்ட் 17ம் தேதி சனிக்கிழமை நிறைவு பெறுகிறது. அதன்பிறகு திங்கள்கிழமையான ஆகஸ்ட் 19ம் தேதி தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் இயக்கப்போகின்றன.