t> கல்விச்சுடர் பொதுத்துறை பணியாளர்களுக்கு 10% போனஸ்:தமிழக அரசு அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 September 2019

பொதுத்துறை பணியாளர்களுக்கு 10% போனஸ்:தமிழக அரசு அறிவிப்பு


அரசு பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கு 10 சதவீதம் பண்டிகைக் கால போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

இதன்படி, அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் குரூப் "சி' மற்றும் "டி' பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் பண்டிகைக் கால போனஸாக அளிக்கப்படும். இந்தத் தொகை வரும் 30-ஆம் தேதிக்குள் அவர்களுக்கு அளிக்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், மின்சார வாரியப் பணியாளர்கள், ஆவின் நிறுவன ஊழியர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர், பூம்புகார் கப்பல் கழகத்தினர், அரசு தேயிலை கழகத்தினர், அரசு ரப்பர் கழகத்தினர் ஆகியோர் போனஸ் பெறத் தகுதியானவர்கள். அவர்களுக்கான போனஸ் குறித்த உத்தரவுகள் சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து தனித்தனியாக வெளியிடப்படும் என்று தனது உத்தரவில் நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்


JOIN KALVICHUDAR CHANNEL