அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) புதிய பாலிசிகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு!
வரும் 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE (அதாவது சம்பளத்தில் பிடித்தம் செய்து கட்டும் வசதி) அஞ்சல் ஊழியர்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு அஞ்சல் ஊழியர்கள் தவிர்த்து மற்ற ஊழியர்களுக்கு PAY RECOVERY MODE பாலிசிகளை துவங்க வேண்டாம்.
இதற்கு பதிலாக அஞ்சல் சேமிப்பு கணக்கு, IPPB கணக்கு, இதர வங்கி கணக்குகளில் இருந்தும் ஆட்டோ பேமென்ட் செய்யும் நடைமுறையை வாடிக்கையாளருக்கு தெளிவுபடுத்தவும்.
மேலும் காப்பீடாளர் தங்களின் PLI பாலிசி Login மூலமாகவும் பிரீமியம் செலுத்தும் வசதியும் உள்ளது.
ஏற்கனவே பிடித்தம் செய்த பாலிசிகளுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை தொடர்கிறது.