. -->

Now Online

FLASH NEWS


Sunday 8 September 2019

அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை: ஏஐசிடிஇ தலைவர் அனில் அதிரடி முடிவு

அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் உயர்கல்வி தொடர்பான ஒரு கருத்தரங்கம் இன்று நடைபெற்றுது. இந்த கருத்தரங்கில் ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுத் தலைவர் அனில், அதேபோன்று தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உள்ளிட்ட பலர் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பிறகு ஏஐசிடிஇ தலைவர் அனில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ' தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது

இதன் காரணமாக அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்க முடியாது என்ற முடிவினை எடுத்துள்ளதாக அவர் கூறினார். மேலும், பொறியியல் கல்லூரிகளில் குறைந்தபட்ச மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கருத்தையும் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கையானது 30% -லிருந்து 50%- ஆக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லை என்றால் அந்த கல்லூரிகளை பாலிடெக்னிக் கல்லூரிகளாகவோ, அல்லது கல்லூரியை மூடும் நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகள் கணிசமான அளவு மூடப்பட்டு வருவதாக அவர் கூறினார். வருடந்தோறும் சுமார் 70 முதல் 80 கல்லூரிகள் மூடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இது போன்ற நிலைகள் மாறவேண்டுமெனில் தொழில் கல்வியோடு உயர்கல்வித்துறை குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கு கல்லூரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், ' தமிழகத்தை பொறுத்தவரை நடப்பாண்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதுபோன்ற கல்லூரிகளை அழைத்து அவர்களிடம் பேசவுள்ளதாக அவர் தெரிவித்தார். பொறியியல் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து விவாதிக்கப்படும்' என கூறினார்.



Posted via Blogaway Pro