t> கல்விச்சுடர் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது குறைந்தது! இனி EMI குறையும்.. SBI அதிரடி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 September 2019

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது குறைந்தது! இனி EMI குறையும்.. SBI அதிரடி



ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ரெபோ விகிதத்தை, எஸ்.பி.ஐ வீட்டுக் கடனுடன் இணைத்திருப்பதால், எஸ்.பி.ஐயின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது குறைந்துள்ளது.

கடந்த ஆக்ஸ்ட் 7ம் தேதியன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், வங்கிகளுக்கான, கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ விகிதம்) 35 அடிப்படை புள்ளிகள் குறைந்தது

இந்த பலன் நேரிடையாக மக்களுக்கு கிடைக்கும் வகையில், எஸ்.பி.ஐ தனது வட்டி விகிதத்தை முன்னதாக குறைத்தது, இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்றும் எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது

இந்த நிலையில் 8.40 சதவிகிதமாக இருந்து வந்த வட்டி விகிதம், இன்று முதல் 8.05 சதவிகிதமாக குறைந்து அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

இது தவிர இந்த வட்டி விகிதமானது ஏற்கனவே இருக்கும் வீட்டு கடன்னாகட்டும் அல்லது புதிய வீட்டு கடனாகட்டும், வரும் இன்று (செப்டம்பர் 1, 2019) முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் ரஜ்னிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.ஐ யில் இந்த திட்டம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
இது தவிர பொருளாதார மந்த நிலை காரணமாக, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இதற்காக முன்னதாக எஸ்.பி.ஐ அறிவித்திருந்த கார் லோனுக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்குவதாக எஸ்.பி.ஐ அறிவித்திருந்து. இது தவிர கார் லோனுக்கான குறைந்த பட்ச வட்டி விகிதம் 8.70 சதவிகிதத்திலிருந்து ஆரபிக்கப்படும் என்றும் கூறயிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பளம் பெறும் வாடிக்கையாளர்கள் காரின் விலையில் 90 சதவிகிதம் வரை கூட கடன் பெறலாம் என்றும் எஸ்.பி.ஐ கூறியுள்ளது கவனிக்கதக்கது.
இது தவிர எஸ்பிஐயின் தனிநபர் கடன் விகிதம் 20 லட்ச ரூபாயாகவும், வட்டி விகிதம் 10.75 சதவிகிதமாகவும், திருப்பி செலுத்தும் காலத்தை 6 ஆண்டுகளாகவும் மாற்றியிருந்தது.
மேலும் கல்விக் கடன் 50 லட்சம் ரூபாய் முதல் வெளிநாட்டிற்கு சென்று படிப்பதாக இருந்தால் 1.50 கோடி ரூபாய் வரை 8.25 சதவிகிதம் வட்டி விகித முறையில் வழங்கப்படும் என்றும், திருப்பி செலுத்தும் காலம் 15 ஆண்டுகளாக வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


JOIN KALVICHUDAR CHANNEL