t> கல்விச்சுடர் சுஜித் என்ன ஆனான்.. ஆதங்கத்துடன் டிவி பார்த்த பெற்றோர்.. பாத்ரூம் கேனில் மூழ்கி இறந்த 2 வயது குழந்தை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 October 2019

சுஜித் என்ன ஆனான்.. ஆதங்கத்துடன் டிவி பார்த்த பெற்றோர்.. பாத்ரூம் கேனில் மூழ்கி இறந்த 2 வயது குழந்தை






 









தூத்துக்குடி: சுஜித் என்ன ஆனான், உயிருடன் மீட்டு கொண்டுவந்து விடுவார்களா, என்று ஆர்வமும், ஆதங்கத்துடனும் டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு அடுத்த அதிர்ச்சி அவர்கள் வீட்டு பாத்ரூமிலேயே காத்திருந்தது.. தண்ணீர் கேனில் மூழ்கி அவர்களது 2 வயது குழந்தை பலியாகிவிட்டது.









தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த தம்பதி லிங்கேஸ்வரன் - நிஷா. லிங்கேஷ்வரன் ஒரு மீனவர். 3 வருஷத்துக்கு முன்பு இவர்களுக்கு கல்யாணம் ஆனது. இவர்களது ஒரேமகள் ரேவதி சஞ்சனா.. 2 வயதாகிறது!


நேற்றிரவு நிஷா, டிவியில் சுஜித்தின் மீட்பு நடவடிக்கைகளை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த லிங்கேஸ்வரனும் நடுக்காட்டுப்பட்டி நிகழ்வுகளை அப்படியே உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.






சுஜித்தை மீட்டு விடுவார்களா? அடுத்து என்ன நிகழும் என்பதிலேயே இவர்களது எல்லா கவனமும் மூழ்கி இருந்ததே தவிர, தங்களுடைய குழந்தையை ரொம்ப நேரமாகவே காணோம் என்பதை இவர்கள் உணரவில்லை. அப்போதுதான், அக்கம் பக்கத்தில் தேடி ஆரம்பித்தனர்.



அங்கெல்லாம் தேடிவிட்டு வீட்டு பாத்ரூமில் பார்த்தபோதுதான், குழந்தை இறந்து கிடந்தது. சிறுநீர் கழிக்க போன சிறுமி, தண்ணீர் எடுத்து ஊற்ற அங்கிருந்த டிரம்மில் கைவிட்டு தண்ணீரை எடுக்க முயற்சித்து இருக்கிறாள். அந்த சமயத்தில், குப்புற விழுந்த அந்த தண்ணீர் கேனிலேயே சஞ்சனா விழுந்து மூச்சு திணறி இறந்திருக்கிறாள் என்பது தெரியவந்தது.



இதை பார்த்து பதறிய பெற்றோர், குழந்தையை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள். இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


சுஜித் என்ற 2 வயது குழந்தையை பறிகொடுத்து தவித்து வரும் இந்த நேரத்தில் சஞ்சனா என்ற 2 வயது பெண் குழந்தையின் அநியாய மரணமும் நம்மை உலுக்கி எடுத்து வருகிறது!


JOIN KALVICHUDAR CHANNEL