திருக்குறள்:
குறள் 892:
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்.
விளக்க உரை:
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
பழமொழி :
sweat is the perfume of success.
வியர்வை தான் வெற்றியின் வாசனை.
இரண்டொழுக்க பண்புகள் :
1.கோபம் என் அறிவை மறைக்கும்.
2.எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.
பொன்மொழி :
நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார். ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை - விவேகானந்தர்
பொது அறிவு :
01.கேரளாவையும் தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய கணவாய்எது?
பாலக்காடு கணவாய்
Palakkat Gap
02. சர்வதேச கல்வி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 24 - January 24
English words :
articulate-able to express the thought clearly
coastal -located on the land by the edge of the sea
தமிழ் இலக்கணம்:
வினைத்தொகையில். வல்லினம் மிகாது.
ஊறு + காய் = ஊறுகாய்
சூடு + சோறு = சுடுசோறு.
நவம்பர் 11
தேசிய கல்வி நாள்
தேசிய கல்வி நாள் (National Education Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.
நீதிக்கதை
விடா முயற்சி
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான். வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.
ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்
நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.
தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.
இன்றைய செய்திகள்
11.11.2025
⭐சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
* தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளன.
⭐ டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு : 11 படுகாயம்
⭐ புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.
கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
⭐மலேசியா அருகே கடலில் படகு மூழ்கி 7 அகதிகள் உயிரிழப்பு-பலர் மாயம்
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀 தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்துள்ளார்.
Today's Headlines
⭐ Steps should be taken to rescue imprisoned Tamil Nadu fishermen - Chief Minister M.K. Stalin's letter. One hundred twenty-eight fishermen and 248 fishing boats from Tamil Nadu are in Sri Lankan custody.
⭐ 8 dead, 11 injured in car blast near Red Fort in Delhi.
7 fire tenders reached the spot and are actively involved in extinguishing the fire.
⭐ Major lakes, including Pudukottai Aranthangi Neelakondan Lake will be renovated for Rs. 15 crore. Kandavarkottai Town Panchayat will be upgraded to a municipality.
⭐ 7 refugees died due to the sinking of a boat in the sea near Malaysia – many of them are missing.
SPORTS NEWS
🏀 Tamil Nadu player Ravichandran Ashwin has announced his retirement from the CSK team.
