வருமான வரி தமிழக அரசு ஊழியர்கள் 13.03.2026 அன்று அல்லது அதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
FY 2026-27 AY 2027-28!
Sir/Madam, As per the Income Tax Act, the "New Regime" is the default tax regime for FY 2026-27. If you wish to opt for the Old Regime, please do so on or before 13.03.2026 through the Kalanjiyam mobile app or website. Once exercised, the option will be final. - TN Treasury
வருமான வரிச் சட்டத்தின்படி, "புதிய வரி முறை" என்பது 2026-27 நிதியாண்டிற்கான இயல்புநிலை வரி முறையாகும்.
நீங்கள் பழைய வரி முறையைத் தேர்வுசெய்ய விரும்பினால், 13.03.2026 அன்று அல்லது அதற்கு முன் களஞ்சியம் மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் அவ்வாறு செய்யுங்கள்.
ஒருமுறை பயன்படுத்தினால், விருப்பமே இறுதியானதாக இருக்கும். - தமிழ்நாடு கருவூலம்
அரசு ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்?
* புதிய வருமான வரியை தேர்ந்தெடுப்பவர்கள் தாங்கள் எதுவுமே செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
* பழைய வருமான முறையை தேர்ந்தெடுக்கப் பட்டால் தாங்கள் தங்களுடைய கைபேசி வாயிலாக களஞ்சியம் செயலியை பயன்படுத்தி பழைய முறைக்கு மாற்றலாம்.
* பழைய வருமான முறை மாற்றப்பட்டால் 2026-27 நிதி ஆண்டிற்கு புதிய வருமான வரி கணக்கீடு மூலம் வரி பிடிப்பதை தமிழக அரசுக்கான சம்பள பட்டியல் தயாரிக்கும் இணையதள மென்பொருளில் மாற்றம் செய்ய இயலாது.
எனவே தாங்கள் புதிய வருமான வரி முறை வேண்டும் என்றால் தாங்கள் எதுவுமே செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அது தானாகவே புதிய வருமான வரிமுறையை கொண்டு வரும்.
தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் தாங்கள் எதுவுமே செய்யாமல் இருந்தால் அது புதிய வருமான முறையை தானாகவே ஏற்றுக்கொள்ளும் புதிய வருமான முறையில் வரும்.