t> கல்விச்சுடர் 2027-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) உத்தேச தேர்வு அட்டவணை வெளியீடு! - கல்விச்சுடர்

Now Online


Recent Posts Widget

21 November 2026

2027-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) உத்தேச தேர்வு அட்டவணை வெளியீடு!


சென்னை: தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2027-ம் ஆண்டுக்கான உத்தேச வருடாந்திர தேர்வு அட்டவணையை (Tentative Annual Planner - 2027) வெளியிட்டுள்ளது.
இதில் வட்டாரக் கல்வி அலுவலர் (BEO), முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (PG Assistant), பட்டதாரி ஆசிரியர் (BT Assistant) மற்றும் 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு (TN-TET) ஆகியவை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் மற்றும் மாதங்கள் விவரம்:


வ.எண் பதவியின் பெயர் அறிவிப்பு வெளியாகும் மாதம் (உத்தேசம்) தேர்வு நடைபெறும் மாதம் (உத்தேசம்)

1 வட்டாரக் கல்வி அலுவலர் (Block Educational Officer) பிப்ரவரி ஜூன்

2 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (Post Graduate Assistants) மார்ச் ஜூன்

3 பட்டதாரி ஆசிரியர் / பயிற்றுநர் (BT Assistant / BRTE) மார்ச் ஜூலை

4 ஆசிரியர் தகுதித் தேர்வு (TN-TET - முதல் முறை) மே ஜூலை

5 அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் ஜூன் ஆகஸ்ட்

6 மாநில தகுதித் தேர்வு (SET) ஆகஸ்ட் செப்டம்பர்

7 ஆசிரியர் தகுதித் தேர்வு (TN-TET - இரண்டாம் முறை) அக்டோபர் டிசம்பர்


*முக்கியக் குறிப்புகள்:

• தேர்வர்கள் தங்களைத் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
• இதில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளில் மாற்றங்களோ, புதிய தேர்வுகள் சேர்க்கப்படவோ அல்லது நீக்கப்படவோ வாய்ப்புள்ளது.
• ஒவ்வொரு தேர்வுக்குமான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்தத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போது அறிவிக்கப்படும்.
• தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus) மற்றும் தேர்வு முறை குறித்த விவரங்களை https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

JOIN KALVICHUDAR CHANNEL