திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:53. சுற்றந் தழால்
குறள் எண்:530
குறள்:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
பொருள்:
தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.
பழமொழி :
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
In youth laziness, in adulthood regrets
இரண்டொழுக்க பண்புகள் :.
1. நம் உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் செயல்களும் நல்ல செயல்களாக அமையும் .
2. பள்ளிக்குத் தினமும் சரியான நேரத்திற்கு வருவேன்; நேரந்தவறாமையை என் வாழ்வில் கடைப்பிடிப்பேன்.
பொன்மொழி :
ஒரு சிறிய அன்பான செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சியை உருவாக்கும்!
Thought for the Day :
A small act of kindness can create a big difference in someone's life.
பொது அறிவு :
1. மக்களவை உறுப்பினர்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
543 உறுப்பினர்கள்.
2. மக்களவை உறுப்பினர்களில் குடியரசு தலைவரால் ஆங்கிலோ இந்திய சமூகத்தில் இருந்து நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
இரண்டு உறுப்பினர்கள்.
English words :
1) Acquiesce - ஒப்புக்கொள் - Comply
2) Zealous - ஆர்வமிக்க - Fervent
புவியியலும் சுற்றுசூழலும் :
"சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம்
• அமைவிடம்: ஈரோடு மாவட்டம்.
• சிறப்பு: கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் முக்கிய இணைப்புப் பகுதியாக உள்ளது. புலிகள் பாதுகாப்பு மேலாண்மைக்காகப் புகழ்பெற்றது.
• விலங்கினங்கள்: புலிகள், யானைகள், சிறுத்தைகள் மற்றும் கழுதைப்புலிகள்."
நவம்பர் 16
உலக சகிப்புத் தன்மை நாள்
உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.
நீதிக்கதை
சாலை பாதுகாப்பு – உயிரைக் காக்கும் விதிகள்
நீதிக்கதை: அவசரம் ஆபத்தைத் தரும்!
ஒரு அழகான கிராமத்தில் அருண், வருண் என்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர்.
அருண் எப்போதும் சாலை விதிகளைப் பின்பற்றும் பழக்கம் உடையவன். ஆனால் வருணுக்கோ எதிலும் அவசரம். பள்ளிக்குச் செல்லும்போது சாலையைக் கவனிக்காமல் ஓடுவதும், சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் வருகிறதா என்று பார்க்காமல் கடப்பதும் அவனுடைய வழக்கம்.
ஒருநாள் காலையில் இருவரும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஒரு பெரிய சாலை இருந்தது. அங்கே போக்குவரத்து சிக்னல் இருந்தும், வருண் சிவப்பு விளக்கைப் பொருட்படுத்தாமல் சாலையைக் கடக்க முயன்றான்.
உடனே அருண் அவனது கையைப் பிடித்து நிறுத்தினான்.
"வருண்! சிவப்பு விளக்கு எரியும்போது சாலையைக் கடக்கக் கூடாது. பச்சை விளக்கு எரியும்போது வாகனங்கள் செல்லலாம். பாதசாரிகளுக்கான பச்சை சிக்னல் வந்த பிறகும், இருபுறமும் வாகனங்கள் நின்றுவிட்டனவா என்று பார்த்துவிட்டுத்தான் கடக்க வேண்டும்" என்றான் அருண்.
மேலும், "சாலையைக் கடக்கும்போது கைப்பேசியில் பேசக்கூடாது. காதில் இயர்போன் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. சாலையில் விளையாடவும் கூடாது" என்று அறிவுரை கூறினான்.
வருண் தனது தவறை உணர்ந்து கொண்டான்.
அன்று பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது ஆசிரியர் கூறிய அறிவுரை வருணின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
"தலைக்கவசம் அணிவது, காரில் இருக்கைப்பட்டை அணிவது, போக்குவரத்து விதிகளை மதிப்பது ஆகியவை நம்முடைய உயிரைப் பாதுகாக்கும் பழக்கங்கள். சாலை விதிகள் நமக்காகத்தான்; அவற்றைப் பின்பற்றுவது நம் கடமை!" என்றார் ஆசிரியர்.
அன்று முதல் வருணும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றத் தொடங்கினான். தன் நண்பர்களுக்கும் சாலை பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினான்.
நீதி: சாலையில் அவசரம் காட்டாதே! போக்குவரத்து விதிகளை மதித்து நட! உன் பாதுகாப்பு மட்டுமல்ல, பிறர் பாதுகாப்பும் உன் கையில்தான் உள்ளது.
நினைவில் கொள்வோம்:
* தலைக்கவசம் அணிவோம்.
* காரில் இருக்கைப்பட்டை அணிவோம்.
* சாலையைக் கடக்க நடைபாதைக் கடவையைப் பயன்படுத்துவோம்.
* போக்குவரத்து சிக்னல்களை மதிப்போம்.
* கைப்பேசி பயன்படுத்திக்கொண்டே சாலையைக் கடக்க மாட்டோம்.
"சாலை விதிகளை மதிப்போம்! உயிர்களைப் பாதுகாப்போம்!" 🚦
இன்றைய செய்திகள்
16.11.2026
🗒️3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்; தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
🗒️ஸ்டார் ஷிப் விண்கலத்தை முதல்முறையாக வெற்றிகரமாக பூமியில் தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை புரிந்துள்ளது.
🗒️தீவிர புயலாகும் ’அக்வான்’: தமிழகத்தில் இன்று முதல் பருவமழை தீவிரமடையும்.
🏀விளையாட்டுச் செய்திகள்
🏃🏻♀️ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் லக்சயா சென் சாம்பியன்.
🏃🏻♀️ பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவு: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய எர்ரானி - பவோலினி ஜோடியினர் .
Today's Headlines
🗒️ The Tamil Nadu Electricity Board has decided to purchase 3,000 megawatts of electricity.
🗒️ SpaceX has created a record by successfully landing its Starship spacecraft on Earth for the first time.
🗒️ Cyclone 'Akwan' is expected to become a severe storm. Monsoon rains in Tamil Nadu are expected to intensify from today.
🏀 Sports News
🏃🏻♀️ Japan Masters Badminton: India's Lakshya Sen has won the championship.
🏃🏻♀️ Women's Tennis Championship – Doubles: The pair of Errani and Paolini have reached the final